பக்கம்:அத்தை மகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



2

ரத்தினத்துக்கு இப்போது, வயது பதினெட்டு. அழகாக வளர்ந்திருந்தாள். 'மூக்கும் முழியுமா, நல்ல சிவப்பு ரெட்டாக் கிளிபோலே' என்று அம்மையார்கள் பலரும் கண்டு மகிழ்ந்து போகும்படி வளர்ந்திருந்தாள். அத்துடன் ஆளே மாறி போய்விட்டாள். -

பாவாடை கட்டி 'காதரை கூதரை மாதிரி'----இப்படித்தான் அவள் தாய் அடிக்கடி கத்துவாள். அதன் அர்த்தம் மகளுக்குத் தெரியாது. அம்மாளுக்கே தெரிந்திருக்குமோ என்னவோ, அது நமக்குத் தெரியாது! - ஊரைக் குட்டைப் புழுதி பண்ணித் திரிந்த 'சின்னப் புள்ளே' சேலை கட்டும் குமரியாக மாறியதும் ஆடை யிலும் உருவத்திலும் பெற்ற மாறுதல்களை குணத்திலும் பெற்று விட்டாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

தகர டப்பாவில் கற்களைப் போட்டுக் குலுக்குவது போல் ஒலி எழுப்பிச் சிரித்த பெண்ணிடம் இப்போது மெல்லிய கிண்கிணிச் சிரிப்பு குடிபுகுந்திருந்தது. பேய்க் காற்று போலக் கதறிக் கூச்சலிட்டவளிடம் இனிய நீரோடைச் சலசலப்பு போன்ற பேச்சைத்தான் இன்று கேட்க முடிந்தது. 'அவுத்து விட்டதுதான் கன்றுக் குட்டி, எடுத்து விட்டதாம் ஓட்டம்' என்று ஊளையிட்டபடி குதித்துக்கொண்டு ஓடியவளிடம் இப்போது குதிப்பைபும் கூத்தாட்டத்தையும் காண முடியாது. அவள் நடையிலே ஒரு துள்ளல் இருந்தது. அசைவிலே ஒரு துடிப்பு உண்டு. நிற்கும் நிலையிலே ஒரு மிடுக்கு உண்டு. பார்க்கும் தினுசிலே ஒரு எடுப்பு இருந்தது. ஆனால் அனைத்திலும், இன் கவிதையில் காணப்படும் கட்டுக் கோப்பு இருந்தது. வெறித்தனம் இல்லை.

பழைய பாவாடை ரத்னம் எடுத்ததற்கெல்லாம் 'வவ்.....வவ்' உதிர்த்து வாழ்ந்தாள் என்றாள் பருவப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/14&oldid=1068641" இலிருந்து மீள்விக்கப்பட்டது