பக்கம்:அத்தை மகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

எரிந்து விழுந்து ஏச வேணும் என்ற ஆசை பிறந்தது. ஆனால் பாதியிலேயே மக்கி விட்டது. அவள் போக்கு அவனுக்கு இனிமையும் மகிழ்வும் கொடுத்தது. அவளை அவன் குறை கூறவில்லை. அதைப்பற்றி யாரிடமும் சொல்லவுமில்லை.

இச்சம்பவம் என்றுமே குமரி ரத்தினத்தின் இன்பக் கனவுக்கு எண்ண ஊற்று. அதை நினைத்ததுமே அவள் கன்னங்கள் ரத்தச் சிவப்பு கொள்ளும். செவ்விய இதழ்களில் சிறு நகை பூக்கும். கண்களில் ஒளி துள்ளும், தன்னையாரும் கவனிக்கவில்லேயே என்று அப்படியும் இப்படியும் திரும்பிப் பார்த்துக் கொள்வாள். தனியாக இருந்தாலும்கூட, தன்னை எவரேனும் பார்த்து விட் டார்களோ என்ற தவிப்பு எழும் அவளுக்கு. சிலசமயம் அவள் அகப்பட்டுக் கொண்டாள். அதனால்தான். தன்னிலே தானேயாகி, தன் நினைவில் மகிழ்ந்து போன போது அவள் சூழ்நிலை மறப்பது இயல்பு. அவளேயே கவனித்திருந்த அன்னை கேட்டு விட்டாள். 'என்னட்டீ ? என்ன நீயே சிரிச்சுக்கிடுதியே?' அவள் என்னத்தைச் சொல்வது? ' ஒண்ணுமில்லே ' என்றாள். 'ஒண்ணுமில்லாமலா சிரிச்சே? ஒண்ணுமில்லாமச் சிரிக்கதுக்கு உனக்கென்ன பைத்தியம் புடிக்க ஆரம்பிச்சுட்டுதா?' என்று கேட்டாள். நல்ல வேளையாக அவள் படித்த கதை கைகொடுத்தது. 'ஒரு கதை அம்மா காலேயிலே படிச்சது. இப்ப நினைப்பு வந்தது. சிரிச்சிட்டேன்’ என்று சொல்லிச் சமாளித்துக் கொண்டாள். அன்றிருந்து ஜாக்கிரதை எனும் பண்பு அவளை விட்டுப் பிரியாத நல்ல துணையாகப் பற்றிக்கொண்டது !

அந்நிகழ்ச்சிக்குப் பிறகு--சின்னஞ்சிறு வயதினிலே தன் கன்னஞ் சிவக்க அவன் முத்தமிட வேண்டுமென எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்ததினலோ என்னவோ, தானே உளங்கனிந்து அவன் கன்னத்தில் முத்தம் பறித்த சம்பவத்திற்குப் பிறகு---ரத்தினம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/17&oldid=975943" இலிருந்து மீள்விக்கப்பட்டது