பக்கம்:அத்தை மகள்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது3

சுந்தரம் உண்ட கிரக்கத்தினால் கண்மூடிக் கிடந்த போது கனவுக் குரல் போல் ஒலித்தது. 'இவர்தான். அத்தான். இவர் ரொம்ப நல்லவர். இவர் இன்றுதான் இங்கு வந்தார்’ என்ற பேச்சு.

மன ஆழத்திலே அமுங்கிக் கிடந்த பழங்கால நினைவின் கனவு விழிப்போ என்று நினைத்த சுந்தரம் கண்களைத் திறந்தான். 'களுக்'குச் சிரிப்பு உதிர்ந்தது அந்த அறையில், கைவளைகள் கட்டியம் கூறின, கன்னி ஒருத்தி அங்கு நிற்கிறாள் என்று.

அவன் கவனித்தான். ஏமாறவில்லை. அவள்தான் நின்றாள், எழில் நிறைந்த காவியமாய்; சிரிப்பு சிந்தும் உயிர் ஓவியமாய் !

அவன் எழுந்து உட்கார்ந்தான். சிரித்தபடி 'அழகுத் தெய்வம் மனமிரங்கி அருள்புரிய வந்துவிட்டது. போலிருக்கிறதே ! திவ்ய தரிசனம் தரலாகாதா என்று நான் பாடவேணுமோ என்று எண்ணினேன். எப்படிப் பாடுவது என்றுதான் தெரியவில்லை' என்றான்.

முகம் புதுமலர் போல் சோபிக்க, அவள் தலை குனிந்து நின்றாள். அவள் அழகை விழுங்கியவாறு அவன் சொன்னான்; சத்தம் கேட்டதும், சொப்பனமோ என்றுதான் நினைத்தேன். பிறகுதான் புரிந்தது நீ அதை மறக்கவேயில்லை போலிருக்கு?'

'எப்படி மறக்கமுடியும்? நீங்கள்தான் என்னை மறந்துவிட்டீர்கள்' என்றாள் அவள், கோணப்பார்வையை கண்களில் நோக்கி. அவள் கைவிரல்கள் வளையல்களோடு விளையாடிக்கொண்டிருந்தன.

'ஹஹ், மறக்கிறதாவது?'

'மறக்காமல் இருந்ததனால்தான்.இவ்வளவு சீக்கிரம் வந்தீர்களாக்கும் !'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/20&oldid=1068642" இருந்து மீள்விக்கப்பட்டது