பக்கம்:அத்தை மகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19



'பின்னே ! இல்லைன்னா இன்னும் ஒரு வருஷமோ ரெண்டு வருஷமோ கழிச்சுத்தானே வருவேன். அநேகமா வராமலே போனுலும் போயிருப்பேனே !' என்றான் அவன் குறும்பாக.

'அடா அடா! என்ன கருணை ! எவ்வளவு அன்பு !’ என்று பரிகாசம் பேசினாள் அவள், அழகாகத் தலையசைத்து.

'அது சரி, ரத்னம், இப்ப இவர் ரொம்ப நல்லவர்னு பாடம் படித்தாயே ! முந்தி மாதிரி நான் முழிக்காமல் கண்ணை மூடிக்கிட்டே யிருந்தால் நீ முன்பு செய்தது போலவே,,....'

'போங்க! என்று கொஞ்சும் குரலில் குழறினாள் கோதை ரோஜாப் பூ மாதிரித் திகழ்ந்த அவள் கன்னங்கள் செம்பருத்திப்பூ ஆகிவிட்டன, வெட்க மிகுதி யினால். அவள் புன்னகை நெளிந்த உதடுகளைக் கடித்துக் கொண்டே, கள்ளவிழிப் பார்வை சிந்தி, வளைக் கலகலப்பு சிதறி, 'பாதரசம் சலிங்--ஜலிங்' என இசை பாடத் துள்ளி ஓடி மறைந்தாள் ரத்தினம்.

அவள் செல்லும் ஒயிலை ரசித்திருந்த சுந்தரம் * ஐயோ அவளைத் துரத்திவிட்டேனே! இன்னும் கொஞ்சநேரம் நின்று இனிமையாகப் பேசியிருப்பாளே” என்று வருந்தினான். 'அவள் அதை மறக்கவில்லை பார்த்தியா!.., ஆமாம். அவள் கேட்டது சரி. எப்படி மறக்கமுடியும்? ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியும் என் நினைவில் பசியதாய் பதிந்துள்ளதே. அவள் மனதில் இன்னும் அழுத்தமாகப் படிந்திருக்கும்’ என்று நினைத்தான்.

'இப்பொழுது அவள் முகம் செக்கச் சிவந்து செவ்வரளிப்பூ மாதிரி ஆச்சுதே. அதே மாதிரித்தான் முன்பும் ஒரு சமயம் அவள் முகம் சிவந்தது. ஆனால் முன்பு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/21&oldid=981799" இலிருந்து மீள்விக்கப்பட்டது