பக்கம்:அத்தை மகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

 இவ்வளவு அழகாகச் சோபித்திருக்கவில்லை அத் தோற்றம்,....உம், அதை அவளும் மறந்திருக்க முடியாதுதான்' என்று எண்ணம் அசைந்து உருண்டது.

அதை அவளும் எண்ணிப் பார்த்தது உண்டு.

அப்போது அவளுக்குப் பதினான்கு வயது. அவனுக்குப் பதினேழோ என்னவோ, பள்ளிப்படிப்பை முடித்துக் கட்டிவிட்டு வேலையற்றிருந்த இடைக்காலம் அது. அவர்கள் வீட்டுத் தோட்டம்தான் காட்சி நிகழ்ந்த இடம். பல பெண்களும் இரண்டு மூன்று சிறுவர்களும் விளையாடிக்கொண்டிருக்தார்கள். அவன் சுவர் ஒரத்தில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து வேடிக்கை பார்த்தான். விளையாடிக்கொண்டிருந்த ரத்தினம் ஆட்டத்திலிருந்து விலக நேர்ந்தது விலகிய அவள் தனியாக நின்றிருக்கலாம். அல்லது வேறு எங்காவது உட்கார்ந்திருக்கலாம். ஆனால் அவள் என்ன செய்தாள்? அவன் அருகில் காலியாகக் கிடந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தாள். சுகமாகச் சாய்ந்து கால்களை ஆட்டிக்கொண்டிருந்தாள். அவன் தவறாக எதுவும் நினைக்கவில்லை. அவளும் விபரீதமாக எதுவும் எண்ணவில்லை. ஆயினும், ஆடிக்கொண்டிருக்த பெண்களில் ஒரு பெண் விளையாட்டாகக் கத்தினாள்: 'ஒஹோ, பொண்ணு மாப்பிளே!; பொண்ணும் மாப்பிள்ளையும் உட்கார்ந்தாச்சு. பாலும் பழமும் எடுத்து வாங்கோ. பாலும் பழமும் கொடுங்கோ பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் !' மற்றப் பிள்ளைகளும் கைகொட்டிச் சிரித்து ஆரவாரித்தன. அவன் அவளைப் பார்த்தான். அவள் முகத்தில் 'குப்'பென்று ரத்தம் கட்டிவிட்டது. வெட்கம். எனினும் அவள் எழுந்து ஓடவில்லே. நகரவேயில்லை. ஆமா, அப்படித்தான். என்ன செய்யணுமுங்கே ?' என்றாள்--- நிதானமான குரலில், 'அஞ்சும் மூணும் எட்டு' என்றான் ஒரு பயல், 'அத்தை மகளைக் கட்டு” என்றது வேறொரு குரல். 'பொண்ணு---மாப்பிள்ளை' என்று கேலியைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/22&oldid=981800" இலிருந்து மீள்விக்கப்பட்டது