பக்கம்:அத்தை மகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21

 துவக்கி வைத்தவள்; 'அத்தை மகனைக் கட்டு, நீ அத்தை மகனைக் கட்டிக்கோ என்று கத்தினாள். அவள் முகம் அதிகம் சிவந்தது. சிவந்த முகத்திலே வெட்கம் தீட்டிய சிவப்பு நன்றாகப் பளிச்சிட்டது. அப்பொழுது கூட அவள் எழுந்திருக்கவில்லை. அவனைப் பார்த்தாள். அவனுக்கோ மிகுந்த சங்கடம். 'போங்கடி மூதேவிகளா!' என்று சீறியபடி எழுந்தான். அவன் அடிக்க வருகிறான் என்று எண்ணிய பெண்கள் சிதறி ஓடினார்கள். அவனோ மெளனமாக வெளியேறினான்....

அதை அவன் மறக்கமுடியாது.

அவளும் மறக்கவில்லை. 'பொண்ணும் மாப்பிள்ளையும்தான். அதற்கென்ன ?' என்றுதான் அவள் உள்ளம் கேட்கும். வாழ்வில் அவனும் அவளும் கணவனும் மனைவியுமாக வேண்டியவர்கள்---ஆகப் போகிறவர்கள் என்று உறுதிப்படுத்த 'நிச்சயதார்த்தம்' நடந்த சுபவேளையிலே அவன் முந்திய நிகழ்ச்சியை நினைத்துக் கொண்டான். அவன் மன அரங்கிலும் அந்நினைவு நிழலாடியது. அவள் வெற்றிச்சிரிப்புடன் அவனை நோக்கினாள். அவன் கண்கள் அவளை ரசித்தன. அவன் சிரித்தான்.

4

ஒரு வாரம் அத்தை வீட்டில் தங்கியிருந்தான் சுந்தரம். அந்த ஏழுநாட்களும் எவ்வளவு மனோகரமானவை! அவற்றையும் அவன் என்றுமே மறக்கமுடியாது. அவளுக்கும் பொன்னான தினங்கள்தான் அவை.

பார்வைகள் எத்தனை! கள்ளச் சிரிப்புகள் எத்தனை எத்தனை! அலுவல்களிடையே அமைதியாகத் தனிமையில் கண்டு பேசி மகிழ அவள் சிருஷ்டித்துக்கொண்ட சந்திப்புகள்தான் எத்தனை! பேச முடியாதபோதும் அவள் உருவம் சதா அவன் கண்களில் பட்டுக்கொண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/23&oldid=1068643" இலிருந்து மீள்விக்கப்பட்டது