பக்கம்:அத்தை மகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

டிருக்கும். வந்த தினத்தன்று பார்வையில் படாமல் பதுங்கிய பாவையும் இவள்தானா என்ற ஐயம் அவனுக்கு இயல்பாகப் பிறந்தது.

ரத்தினத்தின் உற்சாகத்துக்கு அளவே கிடையாது. துள்ளித் திரிந்தாள். மகிழ்வின் மிகையால் உல்லாசப் பாட்டிழுத்தாள். காரணமில்லாமல் சிரித்தாள். தானிருப்பதை அவனுக்கு உணர்த்திக்கொண்டேயிருந்தாள். எதிர் வந்து காட்சி தர இயலாமல் போகும்போதெல்லாம் அவள் காலணிகள் கவிதை பேசும். கைவளைகள் நீரூற்றுச் சலசலச் சிரிப்பு உள்ளத்தில் குளுமை பாய்ச்ச முயலும்.

அவள் அவன் அருகே வருவாள். அவன் கை நீட்டித் தொட முயலும்போது துள்ளி விலகிவிடுவாள், சின்னஞ்சிறு சிட்டுப் போல. அவன் தனியாக இருக்கும்போது நின்று பேச வருவாள். 'ரத்னம்' முன்பு செய்ததுபோல் இப்போ ஏன் துணியவில்லை?' என்று அவன் கேட்கவும் வெட்கத்தைச் சுமந்து வேகமாக வெளியேறுவாள். அவளை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை.

அவர்களை பற்றி மற்றவர்கள் சந்தேகம் கொள்வதுமில்லை. 'சின்னஞ்சிறுசிலே யிருந்து ஒண்ணா வளர்ந்ததுக அத்தை புள்ளே, அம்மான் புள்ளைக. கம்மா சிரிச்சு பேசி விளையாடுவது சகஜம்தானே என்ற தாராள மனோபாவம் அவர்கள் பண்பில் அசையாத நம்பிக்கை. பிறர் நம்பிக்கைக்குக் குந்தகம் விளைவிக்கவில்லை அவர்களிருவரும்.

சுந்தரம் ஊருக்குப் புறப்பட்டபோது, அத்தை சொன்னாள்; 'என்னயிருந்தாலும் இன்னும் ஒரு வருஷம் போகணும்னு மெத்தனமா யிருந்திராதே. எவ்வளவு சீக்கிரமாக் கல்யாண முகூர்த்தத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/24&oldid=981802" இலிருந்து மீள்விக்கப்பட்டது