பக்கம்:அத்தை மகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

நடக்கணும்னு கடவுள் எழுதி வச்சிட்டானே. அது நடக்காமல் தீருமா ? இல்லைன்னா கழுதைக்கு இப்படிப் புத்தி கெட்டுத்தான் போகுமா ?' என்று புலம்பினாள்.

ரத்தினம் ?

அவள் எதுவும் சொல்லவில்லை. அவளால் தவிர்க்க முடியவில்லை. அந்தச் சூழ்நிலையில் அவளால் செய்ய முடிந்தது அதுதான். அதன்படி----தன் உணர்ச்சிகள் இழுத்த இழுப்பிலே----சென்றுவிட்டாள் அவள். அவள் மனப்பண்பை ஆராயத் துணிகிறவர்கள் அவள் செயலுக்கு உணர்ச்சியின் பிசகு, பருவத்தின் பிசகு என்று ஏதாவது பெயரிடலாம்.

ஆனால் யாருமே காரண காரியத் தொடர்புகளை ஆராயத் தயாராக இல்லை. அதனால் காலத்தின் மீது பழியைப் போட்டார்கள்.

'காலம் போற போக்குடீ யம்மா, காலம் போற போக்கு !'-----காலம் கெட்டுப்போச்சு, வேறே யாரையும் குத்தம் சொல்லிப் பிரயோசனமில்லே' என்ற ரீதியிலே பேசினார்கள்.

என்ன நடந்தது?

காலம் ஒடிக்கொண்டிருந்தது.

சுந்தரம் தன் அத்தை மகளுடன்---தனது வாழ்க்கைத் துணைவியாக நிச்சயிக்கப்பட்ட ரத்தினத்துடன்----இன்ப வாழ்வு வாழ வேண்டும் என்று கனவு கண்டு வந்ததில் குறையில்லை. ஆனால் சந்தர்ப்பங்கள் துணை புரியவில்லை, .

நிலைமை மோசமாகிக் கொண்டே வந்தது. எவ்வளவு உழைத்தும் பயனில்லை, அவன் வாழ்வில் வரட்சி---படுவரட்சி, அவன் வசந்தத்தின் வருகைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/28&oldid=981995" இலிருந்து மீள்விக்கப்பட்டது