பக்கம்:அத்தை மகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


தனிமையில் கிடந்து புழுங்கினாள். புகைந்தாள். குமுறினாள். குமைத்தாள். பெருமூச்செறிந்து கருகினாள், மெலிந்தாள், ஏங்கினாள்.

அவளுக்கு அத்தானின் போக்கு அலுப்பு கொடுத்தது. விரக்தி ஏற்படுத்தியது. அவன் மீது வெறுப்பு உண்டாககியது. கசப்பை வளர்த்தது.

அவள் பெண். இளம் பருவ மங்கை. உணர்ச்சிகளின் உயிர்ப்பு.

அவள் உண்ர்ச்சிகளை யாரும் கெளரவிக்கவில்லை. அவளுடைய அத்தான் அவள் வாழ்வில் இனிமை சேர்க்கும் தென்றலாய் விளங்கவில்லை. வரட்சி வீசும் அனல் காற்றாகவே திகழ்ந்தான். அவள் அன்னை தன் மகளும் நாலுபேரைப்போல் நன்றாக வாழவேணும் என்று ஆசைப்பட்டாள். குழந்தையும் குடும்பமுமாக அவள் சிறப்புறவேணும் என விரும்பினாள். தன் சொந்த மருமகனுக்கே---முறை மாப்பிள்ளைக்கே---அவளை உரியவளாக்க முயன்றாள். அவளால் இயன்றதைச் செய்தாள். ஆனால் 'அவன் அப்படி யிருக்கிறானே. யாருக்கோ வந்த விருந்து மாதிரி' என்று குறைபட்டுக் கொள்ளத்தான் முடிந்தது அவளால்.

பெருமூச்செறிந்து குமைந்து வதங்கிய பருவ மங்கையின் குறு குறு கண்கள் எங்கும் சுழன்றன, தேன் தேடித்திரியும் வண்டுகள் போல, அவளை ஜன்னலோரத்தில் காணமுடிந்தது. தெருவாசலில் நிற்பதைப் பார்க்க முடிந்தது மாடியில் நின்று எதிர்மாடி ஜன்னலில் கண் தூண்டில் வீசிக் காத்திருப்பதை உணர முடிந்தது பலரால்.

அவள் தாய் புத்திமதிகளும் போதனைகளும் சொல்வது அதிகரித்தது கட்டுப்பாடுகள் கூட அதிகமாயின. மகள் பருவமெய்திப் பல வருஷங்களாகி விட்டன ; இதற்குள் கல்யாணமாகி யிருந்தால் பேரன் பேத்திகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/30&oldid=981998" இலிருந்து மீள்விக்கப்பட்டது