பக்கம்:அத்தை மகள்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30


அவள் என்ன செய்யமுடியும்? மகளேக் கண்டிக்கலாம். புத்தி சொல்லலாம். அவ்வளவுதானே!

அவள்றியாமலே மகளுக்கும் பக்கத்து வீட்டுச் சாமிநாதனுக்கும் நட்பு மலர் பூத்து உறவுக் காய் தோன்றியிருந்தது. பருவம் கன்னியை ஆட்டிவைத்தது. உணர்ச்சி அவளைப் படுத்தி வந்தது.

தனக்கே உரிய---தன்னே அன்னவனுக்கு உரியவளாக்கி விடத் துணைபுரியும்---வைடூர்யக் கண் வண்டு இசை பாடி வரும் என்று காத்துக் காத்து வதங்குகிற மலர், காற்றோடு களிவெறிக் கானம்பாடி வந்து உறவு கொண்டாடத் தயங்காத எந்த வண்டையும் வரவேற்பது இயற்கைதானே ?

அது தான் நடந்தது அவள் வாழ்விலும்.

தாயின் கண்காணிப்பு வெறும் தொல்லையாகத் தோன்றியது. புதிதாக வந்த அன்பனிடம் சொன்னாள். “இத்ததைய தொல்லைகள் எதுவுமே இல்லாத இடத்துக்குப்போய் விடுவோமே' என்று ஆசை காட்டினான் அவன்.

'எங்கே போவது ?'

'எங்காவது ! உன்னையும் என்னையும் தன்னுள் ஐக்கியமாக்கிக் கொள்கிற ----நீ இன்னவள், நான் இன்னான் என இனம் பிரித்துக் காட்டும் பேத உணர்வின் சிறு அலைக்குக்கூட இடமில்லாத---மானிட சமுத்திரம் அவசர நாகரிகவேகத்திலே அலைமோதும் எந்தப் பட்டணத்துக்காவது தான்.'

"நம்மை நாமே இழந்து விடுவதற்காகவா?’ என்று கேட்டாள் அவள்.

'இல்லை. நம்மில் நாமே நமக்காக வாழ்வதற்குத்தான். அத்தகையச் சூழ் நிலையின் நடுவிலே நமக்கெனத் தேர்ந்த தனி வீட்டில் எனக்குத் துணை நீ; உனக்குத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/32&oldid=982006" இருந்து மீள்விக்கப்பட்டது