பக்கம்:அத்தை மகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

துணை நான் என்று வசிக்கும் பாக்கியம் எத்தகைய இன்ப வாழ்வாக இருக்கும் தெரியுமா?

அவன் சொல்லில் அவளுக்கு நம்பிக்கை பிறந்தது. அவள் தன் அத்தானுடன் வாழக் கனவு கண்டிருந்த நிலை அத்தகையது தானே. அவனுக்கு அவள். அவ ளுக்கு அவன்-அவளுடைய அவன். அவனுடைய அவள். வேறு யாருக்கும் இடமில்லே. குழந்தை? ஓ! அதைப்பற்றி யோசிக்க எவ்வளவோ காலமிருக்கிறது...

இப்படி மனக்கோலமிட்டு வந்தவள் அவள். அவள் இட்டகோலம் அழிந்துவிடும் போலிருந்தது. அழியாது, அழியக்கூடாது என்று புதுப் புள்ளி குத்த வந்த துணைக்கரம்போல் குறுக்கிட்டான் சாமிநாதன்.

ஆகவே அந்த ஊரின் ஜனத்தொகையில் இரு நபர் குறைவு ஏற்பட்டது. -

ஒன்று அவன். மற்றது அவள்...சாமிநாதன்-ரத்தினம். - .

விஷயம் தெரிந்ததும் விதவிதமான விமர்சனங்கள் பிறக்காமலா போகும் !

'தெரியுமே! அந்தப் பெண் அலைந்த அலைச்சலில் இப்படி ஏதாவது ந்டக்கும்னு ந்ல்லாத்தெரியும்'... "துக்குத்தான் எதையுமே காலா காலத்திலே செய்து முடிச் சிடனும்கிறது'... அது எப்பவுமே ஒரு மாதிரித்தான், சின்ன வயசிலேயிருந்து தன் போக்காகவே வளர்த்தது. அகம்பாவம் புடிச்ச மூதி'. !

பேச்சுக்குக் குறைவில்லே!
கந்தரத்துக்கும் விஷயம் தெரியாமல் போகுமா ?

அவன் இதயத்திலே கடுமையான வடு ஏற்பட்டது. 'ரத்னம் இப்படியா செய்து விட்டாள்? ரத்னமா ? நம்பமுடியலேயே... வேதனைக்குளவி அவன் இதயத்தில் கொட்டிக் குடையத் தொடங்கியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/33&oldid=982659" இலிருந்து மீள்விக்கப்பட்டது