பக்கம்:அத்தை மகள்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.அத்தை மகள்

1

'ரத்னம்...ஏ ரத்னம்...ஏட்டி ரத்னம்...ஏளா, ஏவுளா ஏம்பிளா...ஏ ரத்னா.....-ரத்னாபாய்.. ரத்தினாம்பா...ரத்தினம்மா...ரத்னத்தம்மா...ஹொ ஹோஹோ - பேர்களைப் பாருங்கடா ஏட்டி யேட்டி ரத்தினோம்......'

'வவ்வவ்வே...வவ் வவ் வவ்...மோறையைப்பாரு. கொழுப்பு புடிச்சு அலையிதியோ? இல்லே, கேட்கிறேன். ஏட்டியாம். ஏன் சொல்லமாட்டே? ஏட்டியா மில்லா. இன்னமே சொல்லு பார்க்கலாம்.'

இரண்டு குரல்கள். முதல் குரல் ஒரு 'அவன்' . இரண்டாவது ஒரு 'அவள்’.

அவன் ஒரு பையன், பெயர் சுந்தாம். பதின்மூன்று: வயதிருக்கலாம். அவளுக்குப் பத்து வயது.

'சொன்னா என்ன செஞ்சிருவியாம்?' என்றான் அவன் ஜம்பமாக.

'இல்லே, சொல்லேன் பார்க்கலாம்' .

'சொன்னா என்னட்டி செஞ்சிருவே? ஏட்டி ஏட்டி ரத்தினேம்..ஏ புள்ளே ரத்தினேம் ' என்று வாய்ப் பாட்டு ராகம் இழுத்தான் பையன். 'ஆனா ஆனா.ஆவேன்னா.... ஈன்னா ஈன்னா ஈயேன்னா' என்று பள்ளிக்கூடத்தில் தொண்டைகிழியக் கத்திக் கூப்பாடு போட்ட பழக்கம்கைவிட்டு விடுமா என்ன! அதிலும் அவளைக் கேலி செய்வதிலே அவனுக்குத் தனி மகிழ்வு.

அவள் அவனை கவனித்தாள். அவள் முகத்தில் கோபமும் சிரிப்பும் கொஞ்சி விளையாடின. புள்ளெயாம். ஏன் சொல்லமாட்டே? ஏன் ஐயாப்பிள்ளை, எதுக்காகப் புள்ளெயின்னு சொல்லுதே? நான் என்ன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/5&oldid=1115400" இருந்து மீள்விக்கப்பட்டது