பக்கம்:அநுக்கிரகா.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

101

"நான் எதுக்குப்பா? நீயும் பாப்பாவும் போயிட்டு வாங்க, போதும்."

“அதெல்லாம் முடியாது. நீங்க வந்தே ஆகணும்."

"நான் வந்து என்ன செய்யப் போறேன்?"

“நீங்க வாங்க, சொல்றேன்."

"சரி, நீ இவ்வளவு வற்புறுத்தறப்ப நான் எப்படி மாட்டேன்றது?"

முத்தையாவும் தயாரானார். மூவரும் ம.மு.க. கட்சிக் கொடி கட்டிய காரில் தலைவர் வீட்டுக்குப் போனார்கள். அங்கே திருவிழாக் கூட்டம். ஜெயித்த எம்.எல்.ஏ.க்கள் நிறையப் பேர் மாலையோடு வந்து காத்திருந்தார்கள். பொன்னுரங்கம் க்ளூ கொடுத்தான்.

முதல் மாலை நம்மளூதா இருக்கணும்! நீங்க எதையும் கண்டுக்காதீங்க, பாப்பாவும் நீங்களும் முன்னாடி நடங்க. நான் பின்னாடி மாலையோடு வரேன். காக்க ஆரம்பிச்சோம்னா காக்க விட்டே கொன்னுடுவாங்க. தாய்க் குலம்னால் தலைவருக்குக் கோவம் வராது. யார் தடுத்தாலும் கேட்காமத் துணிஞ்சு உள்ளார பூந்துடுங்க. பாப்பா மாதிரிப் பொண்ணைப் பார்த்தா தலைவரே முக மலர்ந்து போவாரு."

அவன் யோசனைப்படியே பலரும் உள்ளே போகப் பயந்து வெளியே காத்திருந்தபோது, அநுக்கிரகாவும், அவரும் துணிந்து தலைவரின் ஏ. சி. அறையில் நுழைந்தனர். பொன்னுரங்கம் மாலையோடு பின் தொடர்ந்தான்.

அந்தப் பரபரப்பான அரசியல் சூழலிலும், தமிழ்த் தினசரியின் சினிமாப் பகுதியில் 'குளு குளு ஊட்டியில் கொய்யாக்காய் குப்புசாமி ஜல்சா', தலைப்பில் " மூழ்கி யிருந்த தலைவரை 'வணக்கங்க' என்ற அநுக்கிரகாவின் குயில் குரல் சுகமாகக் கலைத்துக் கவனத்தை ஈர்த்தது. கொய்யாக்காய்க் குப்புசாமி ஒரு பிரபல காமெடியன். தலைவருக்குப் பிடித்தவர்.

அநு.—7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/103&oldid=1263991" இலிருந்து மீள்விக்கப்பட்டது