பக்கம்:அநுக்கிரகா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

105

செய்தி ஸ்தாபனங்களுக்கும் ஃபோன் பண்ணி முடித்த பின் முத்தையா பக்கம் திரும்பி, "ரோஸ் கார்டன்ஸ் ஹோட்டல் ஏ.சி. டீலக்ஸ்-கான்பரன்ஸ் ரூமிலே ஒரு அம்பது லஞ்சுக்குச் சொல்லிடுங்க," என்றான் பொன்னுரங்கம்.

மறு பேச்சுப் பேசாமல் முத்தையா ஹோட்டல் ரோஸ் கார்டன்ஸ் நம்பரைச் சுழற்றினார். பேசி முடித்தார். பிரஸ் மீட்-லஞ்ச்-ஏற்பாடாயிற்று.

"சோத்தைப் போட்டு மத்தியானம் ரெண்டு மணிக்குச் சொல்லி அனுப்பிட்டோம்னா சாயங்காலம் எல்லாப் பேப்பரிலேயும் வந்துடும். முதல் பக்கத்திலேயே போட்டுருவாங்க."

"எதைப் போடுவாங்க? கொஞ்சம் புரியறாப்பலதான் சொல்லேன் பொன்னுரங்கம்."

"பார்த்துட்டே இருங்க! என்ன மாதிரி மாயாஜாலம்லாம் நடக்குதுன்னு?" அப்போது பொன்னுரங்கம் படு உற்சாகமாக இருந்தான். பகலில் ரோஸ் கார்டன்ஸ் விருந்து முடிந்ததும், இனிமே நீங்க இங்கே இருக்கப்படாது. நீங்களும், பாப்பாவும் நைஸாக் கழட்டிக்குங்க. நான் பார்த்துக்கறேன்," என்று அவர் காதருகே பொன்னுரங்கம் முணுமுணுத்தான். இருவரும் அப்படியே செய்தார்கள். "வாங்க! நியூஸ் சொல்றேன்," என்று பத்திரிகைக்காரர்களோடு தனியே போனான் பொன்னுரங்கம்.

மாலைச் செய்தித்தாள்களில் எல்லாம் அநுக்கிரகா கட்சி தலைவருக்கு முதல் மாலை அணிவித்ததாகவும், அரை மணி நேரத்துக்கு மேல் பல விஷயங்கள் குறித்துத் தன் தந்தையோடு அவரிடம் அந்தரங்கமான முறையிலே பேசிக் கொண்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகி இருந்தன.

'இவர்களது இந்தச் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, ஆக்ஸ்ஃபோர்டு பட்டதாரியும், புகழ் பெற்ற ஆவாரம் பட்டு ம்ஹவுஸ் பெண்மணியுமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/107&oldid=1263997" இலிருந்து மீள்விக்கப்பட்டது