பக்கம்:அநுக்கிரகா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

107

முத்தையா காரையும் அவன் கேட்ட பணத்தையும் கொடுத்தார். ராசிபுரம் முத்தம்மாள், மருக்கொழுந்துப் பேட்டை மங்கையர்க்கரசி, கோவாலனூர்க் கண்ணம்மாள், பிச்சாண்டி புரம் மாரியம்மாள், கள்ளப்பள்ளம் காமாட்சி ஆகிய ஐந்து பெண் எம்.எல்.ஏ.க்களையும் சந்திக்கப் புறப்பட்டான் பொன்னுரங்கம்.

"பெரிய பெரிய கொம்பன்லாம் வெளியே மாலையோட காத்திருக்கிறப்ப, நம்ம தலைவரு முந்தா நாள் கட்சியிலே சேர்ந்த இந்த அநுக்கிரகாவைத்தான் முதல்லே மாலை போட வரச்சொல்லி உள்ள கூப்பிட்டாரு. இவங்க சேர்ந்த வேளைதான் கட்சி சட்டசபையில் இத்தினி அறுதிப் பெரும்பான்மையா வந்திருக்குன்னு தலைவர் நினைக்கிறதுதான் காரணம். மத்தவங்களை அரை செகண்ட் ஆனாலே, 'டயமில்லே, புறப்படுங்க. அப்புறம் பார்க்கலாம்'னு கையைக் கூப்பி, வெளியே தலையைப் பிடிச்சுத் தள்ளாத குறையாகத் துரத்தி விடற தலைவர், இந்த அநுக்கிரகா கிட்டவும், அவங்க ஃபாதர் சர்,வி.டி., முத்தையா - கிட்டவும் அரை மணிக்கு மேலே உட்கார்த்தி வச்சிப் பேசிக்கிட்டிருந்தாருன்னா பார்த்துக்கங்களேன். இவங்கதான் அடுத்த ஹவுஸிங் மினிஸ்டர். முன்னாடி நீங்களே வேண்டிக்கிட்ட மாதிரிப் பண்ணினா, மத்தப் பெண் எம். எல்.ஏ.க்களான உங்களுக்கும் மரியாதை. அவங்களுக்கும் மரியாதை. தலைவரும் தன் மனக்குறிப்பறிஞ்சு நீங்க நடந்துக்கிட்டீங்கன்னு உங்களுக்கு வேற ஏதாச்சும் கமிட்டித் தலைமை - வாரியத்தலைமைன்னு மத்தப் பதவிகளைக் கொடுப்பாரு, தலைவர் மனசு புரிஞ்சு தான் நான் இதைத் தயாரிச்சுக்கிட்டு வந்திருக்கேன், உங்க கிட்ட கையெழுத்துக்காக வந்திருக்கேன்," என்று சவிஸ் தாரமாக எடுத்துக் கூறி தயாராக எழுதி வைத்திருந்த காகிதத்தில் கையெழுத்துக்கு நீட்டினான் பொன்னுரங்கம். ஐந்து பெண் எம்.எல்.ஏ.க்களில் யாருமே தட்டிச் சொல்ல வில்லை. உடனே கையெழுத்துப் போட்டுக் கொடுத்து விட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/109&oldid=1264000" இலிருந்து மீள்விக்கப்பட்டது