பக்கம்:அநுக்கிரகா.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

அநுக்கிரகா

சட்டம் ஒன்றைப் பிறப்பித்து உலக பாங்க் உதவியுடன் ஏழைகளுக்காக நிறைய அடுக்கு மாடி வீடுகள் கட்டப் போறோம். முதல்வர் உடனடியா அதைக் கவனிக்கச் சொல்றாரு."

முத்தையாவுக்கு எலெக்ஷன் சமயத்தில் தன்னைச் சந்திக்க வந்துவிட்டுத் துக்கிரி மாதிரி என்னமோ சொல்லிச் சென்ற அந்த எஸ்டேட் அதிபர் நினைவு வந்தார் இப்போது.

"என்னப்பா, பதில் சொல்லாம இருக்கீங்க? என் மேலே கோபமா? என்ன யோசிக்கிறீங்க?"

அவர் அவளுக்குப் பதில் சொல்ல வாயைத் திறக்குமுன் வெளியே இருந்து யாரோ உள்ளே வர அனுமதி கேட்டுக் காலிங்பெல்லை அழுத்தினார்கள். அவர் கதவைத் திறந்தார். பொன்னுரங்கம் மலர்ச் செண்டுடன் உள்ளே நுழைந்தான், மகிழ்ச்சி அம்மா! என் பாராட்டுக்கள். அமைச்சராயிட்டீங்க... இந்த ஏழையையும் ஞாபகம் வச்சிக்குங்க.... மறந்துடாதீங்க." என்று சிரித்தபடி மலர்ச் செண்டை அநுக்கிராவிடம் நீட்டினான் அவன். முத்தையாவும் அநுக்கிரகாவும் இருந்த முகபாவத்தைம் பார்த்து, "என்னங்க, நான் போயிட்டு அப்புறம் வேணா வரேன், ஏதோ குடும்ப விஷயம் பேசிக்கிட்டு இருந்தீங்க போலிருக்கு" என்றான்.

“அதெல்லாம் ஒண்ணுமில்லே. நீயும் இரு. இது உனக்கும் தெரிய வேண்டிய விவகாரம்தான் பொன்னுரங்கம்" என்றார் முத்தையா.

"என்ன விசயங்க ...?"

அநுக்கிரகாவே சுருக்கமாக மறுபடி விஷயத்தை விவரித்தாள். பொன்னுரங்கம் அவளுடன் ஒத்துப் பாடினான்.

"இதிலே பாப்பா செய்யிறது தாங்க சரி! தலைவர் நாலும் யோசித்துத்தான் இந்த அறிவுரையைச் சொல்லி யிருப்பாரு. இந்த வீட்டிலே மந்திரிங்கிற முறையிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/118&oldid=1264105" இலிருந்து மீள்விக்கப்பட்டது