பக்கம்:அநுக்கிரகா.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

117

பாப்பா இருந்தா-அரமணைவாசி அரமணைவாசின்னு இதைச் சொல்லியே ஃபியூச்சர் இல்லாம ஒடுக்கிடுவாங்க. இங்கே போக வர வழியும் நல்லா இல்லே. வழியை ஒழுங்கு பண்ணினால் குடிசைவாசிங்க கூப்பாடு போடுவாங்க. ஒழுங்கு, பண்ணாட்டி மந்திரிங்கிற முறையிலே பாப்பாவைத் தேடி வர்றவங்களுக்கு இடைஞ்சலா இருக்கும்."


18

பொன்னுரங்கமும் கை விட்டுவிடவே முத்தையா கதி நிராதரவாயிற்று. மறுநாளே அநுக்கிரகா அரசு அலாட் செய்திருந்த வீட்டுக்குக் கிளம்பி விட்டாள். சரிகைப் புடவைகள், பட்டுப் புடவைகள், நகை நட்டு எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. வேண்டாமென்று சொல்லி . விட்டாள். எளிய கைத்தறிப் புடவையையே கட்டப் போவதாகக் கூறினாள். அவளுடைய மாற்றம் முத்தையாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆவாரம்பட்டு ஹவுளின் முகப்பைத் தவிர மூன்று பக்கமும் காம்பவுண்டுச் சுவரில் சாத்திய மாதிரி இருந்த குடிசைகளை எந்தத் தொல்லையும் செய்யாமல் தொடர்ந்து அநுமதிக்கவேண்டும் என்று அநுக்கிரகாவும், பொன்னுரங்கமும் முத்தையாவிடம் மன்றாடி வேண்டிக் கொண்டார்கள். அது மந்திரி வீடாகி விட்டதால் இனிமேல் தங்கள் குடிசைகள் எந்த நிமிஷமும் காலி செய்யப்படலாம் என்று பயந்து செத்துக்கொண்டிருந்த குடிசைவாசிகள் அநுக்கிரகா வேறு அரசாங்க வீட்டிற்குக் குடிபோகப் போகிறாள் என்று தெரிந்ததும். நிம்மதியாகப் பெருமூச்சு விட்டனர். பயம் தவிர்த்தனர். ஆபத்தில்லை என உணர்ந்தனர்.

ஆவாரம்பட்டு அரண்மனையின் முன் பக்க

மைதானமும் சாலையும் மட்டும் கொஞ்சம் ஒழுங்காக இருந்தன. மதில் சுவரில் குடிசை போட்டிருந்த சிலர் சுவரேறிக் குதித்துப் பங்களா தோட்டத்துத் தென்னை மரங்களில்

அநு.—8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/119&oldid=1264110" இலிருந்து மீள்விக்கப்பட்டது