பக்கம்:அநுக்கிரகா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அநுக்கிரகா

பொறுமை இழந்த வி.டி. முத்தையா விசுவரூபம் எடுத்தார். விரக்தியிலும் தன்னைவிட எல்லா வகையிலும் தாழ்ந்த ஒருவனிடம் அவமானப்பட்டுவிட்ட ஆத்திரத்திலும். சீறினார். கனிவண்ணனைப் போன்ற அரசியல் மலிவுப் பதிப்புப் பேர்வழிகளை ஆயிரம் பேரானாலும் விலைக்கு வாங்கிப் போடுகிற வசதியுள்ள அவர், இப்போது அவனை விலைக்கு வாங்குவதைவிடப் பழி. வாங்கித் தீர்த்து விடுவதையே விரும்பினார். அது அவரால் முடியும் என்றே தோன்றியது.

அவனை விலைக்கு வாங்குவதானாலும், பழிவாங்குவதானாலும் இரண்டிற்குமே செலவாகும். சொல்லப் போனால் விலைக்கு வாங்குவதைவிடப் பழிவாங்குவதற்கு இன்னும் அதிகம் செலவாகக் கூடும். அப்படி. ஆனாலும் பரவாயில்லை. கனிவண்ணனைப் பழிவாங்கியே தீருவது என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டிருந்தார் அந்தப் பரம்பரைப் பணக்காரர்.

'கிட்டத்தட்ட எண்பதை நெருங்கும் தன் வயது, குடும்பம், பணம் எதையுமே லட்சியம் செய்யாமல் அவன் தன்னை அவமானப் படுத்திவிட்ட வடு அவருள் ஆறவே இல்லை. முத்தையா யோசித்தார். தன் வயதுக்கு இனிமேல் தான் அவனை எதிர்த்து அரசியலில் இறங்கி ஈடுபட்டுப் பழிவாங்குவது என்பது சாத்தியமில்லை. அது பொருத்தமாகவும் இருக்காது. ஒரே மகள் அநுக்ரகா முந்தா நாள் வரை ஆக்ஃஸ்போர்டில் தங்கிப் படித்தவள். அல்ட்ரா மாடர்ன் பழக்க வழக்கங்களும் ஆக்ஸ்ஃபோர்டு உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலமும் தமிழக -இந்தியப் பட்டி தொட்டி - அரசியலுக்குத் - தோதுபடுமா என்றும் சந்தேகமாக இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லை. முத்தையாவின் மூத்த தாரத்துக்கு இரண்டு பையன்கள், இருவரும் - அவரோடு இல்லை. கருத்து வேறுபட்டுத் தங்களுக்குச் சேர. வேண்டியதைப் பிரித்துக் கொண்டு போய் விட்டார்கள். ஐம்பது வயதில் கொச்சியிலிருந்து ஒரு மலையாளப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/12&oldid=1267815" இலிருந்து மீள்விக்கப்பட்டது