பக்கம்:அநுக்கிரகா.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

அநுக்கிரகா

மாளிகையைச் சுற்றி எங்கே எப்படி எத்தனை குடிசை போட்டாலும் யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள். முத்தையாவுக்கு எந்த அரசியல் செல்வாக்கும் இல்லை'என்று பரவலாக ஓர் அபிப்பிராயம் ஏற்பட்டு விட்டதால் பங்களாவிற்குள் நுழையக் குறுகலாக ஒரு வழி—ஒரு சிறிய கார் போவதற்குக் கூடச் சிரமமான வழி மட்டும் விட்டு விட்டு மற்ற எல்லா இடங்களிலும் கெராவ் செய்தாற் போல் குடிசைகள் போட்டுவிட்டார்கள். ஆவாரம்பட்டு மாளிகை தோட்டம் துரவு உள்ளிட்ட பகுதி குடிசைகளின் நடுவே சிறையுண்டது போல் சிக்கியது.

முத்தையாவும் சோர்ந்து விடவில்லை. வயது எண் பத்திரண்டானாலும் பிடிவாதம் தளராமல், 'என் வீட்டுக்குள் நுழையப் பாதை இல்லை. உபயோகிக்கச் சுகாதார வசதிகள் இல்லை! ஆசுவே கார்ப்பரேஷன் வரியைத் தான் இனிமேல் கட்ட முடியாது' என்று கோர்ட்டில் வழக்குப் போட்டார்.

உணர்ச்சி வசப்பட்டு அந்தக் கேஸைப் பற்றி எங்கோ சொற்பொழிவில் தன்னைக் கிண்டல் செய்து பேசிய அமைச்சர் அநுக்கிரகாவுக்கும் 'சப்ஜூடிஸ்' என்று ஒரு நோட்டீஸ் அனுப்பினார். தாட்சண்யமே காட்டவில்லை.

முதல் கேஸில் அவருக்குச் சாதகமாக ஹைகோர்ட்டில் தீர்ப்பாயிற்று. அவரது ஆவாரம்பட்டு ஹவுஸிற்கான சாலை, அப்ரோச் ரோடு, பெட்டர்மெண்ட் வசதிகள், சுகாதார ஏற்பாடுகளை ஒழுங்காகச் செய்து குடிசைகளை அகற்றித் தராவிட்டால் மாநகராட்சி அவரிடம் வரி வசூலிக்க முடியாது. என்ற கோர்ட் தீர்ப்பைக் கிண்டல் செய்தும் குடிசைகளை அகற்றியே தீரும் பிடிவாதமான போக்கைக் கண்டித்தும் எங்கோ பேசிவிட்டுத்தான் அநுக்கிரகா வம்பில் மாட்டிக் கொண்டாள். சப்ஜூடிஸ் ஆயிற்று.

சர். வி. டி. முத்தையாவுக்கு ஆதரவாகக் கிடைத்த தீர்ப்பை எதிர்த்து மாநகராட்சி சுப்ரீம் கோர்ட்டில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/122&oldid=1265103" இலிருந்து மீள்விக்கப்பட்டது