பக்கம்:அநுக்கிரகா.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

121

அப்பீல் செய்தது. கனிவண்ணனுக்கு பயந்து தன்னைக் குடிசைவாசிகளின் ரட்சகி என்று காட்டிக் கொள்ளும் சீப் பாப்புலாரிட்டிக்காக மகள் போடும் ஏழை ஆதரவு வேஷம் அவருள் சிரிப்பை வரவழைத்தது. வோட்டுக்காகவும், தேர்தலை நினைத்துமே செயல்படுகிறவர்கள் நீடித்த சமூக நியாயங்களை பற்றிக் கவலைப் படுவதே இல்லை என்பது தான் அவரது குற்றச்சாட்டு, அந்தக் குற்றம் தம் மகளிடமே இருந்தாலும் விடத் தயாராயில்லை அவர்.

இந்தச் சமயம் பார்த்து, 'குடிசை வாழ்வோர் நல் வாழ்வுக்காக எந்தப் புறம்போக்கு நிலம் அல்லது உபரி நிலம், பட்டா நிலம் ஆனாலும், நியாயமான விலை கொடுத்து அதை அரசு எடுத்துக்கொண்டு அடுக்கு மாடி வீடுகள் கட்ட அந்நிலத்தைப் பயன்படுத்தலாம்' என்ற அவசரச் சட்டம் திடீரென்று கொண்டு வரப்பட்டது. ஓர் இரவில் கவர்னர் உத்தரவாக அது வந்தது.


19

நீதிமன்றத் தீர்ப்பு மேலும் தனக்குச் சாதகமாகித் தான் எங்கே குடிசைகளைப் பிரித்துப் போட்டுவிடக் கூடுமோ என்ற பயத்தில் தன் மகளும் அரசும் தனக்காகவே அந்த அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்தார்களோ என்று முத்தையாவுக்குத் தோன்றியது.

வரப்போகிற அடுத்த தேர்தலிலும் அந்தத் தொகுதியிலுள்ள அறுபதுக்கும் மேற்பட்ட குடிசைப் பகுதிகளின் ஓட்டுக்களைக் கவரவே அநுக்கிரகா இந்தத் தந்திரம் செய்வதை அவர் புரிந்துகொண்டார்.

பொன்னுரங்கமும், தன் மகள் அநுக்கிரகாவும் தன்னை ஏமாற்றிவிட்ட விரக்தியில் கடுங்கோபம் அடைந்த முத்தையா, ஆவாரம்பட்டு ஹவுஸ் முகப்பில், 'அரசியல் வாதிகளும், பிச்சைக்காரர்களும், பெருவியாதியஸ்தர்களும் கண்டிப்பாக உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/123&oldid=1265104" இலிருந்து மீள்விக்கப்பட்டது