பக்கம்:அநுக்கிரகா.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

அநுக்கிரகா

விட்டால் அரை நொடியில் எல்லா ஏற்பாடுகளும் செக்யூரிட்டி வசதிகளும் செய்துமுடித்து, "மினிஸ்டர் வராங்க," என்று தகவலும் சொல்லிவிடுவார்கள். அதிகார பூர்வமான விசிட்டாயிருந்தால் அப்படிச் செய்யலாம். ஆனால் இதுவோ பிரைவேட் விசிட். இதுவரை அமைச்சரான பின் அவரிடமிருந்து பிரிந்துவந்த பிறகு அவள் அந்த வீட்டுக்குப் போய்த் தந்தையைப் பார்க்கவே இல்லை. முதல் தடவையாகப் போகிறாள். 'நிர்த்தாட்சண்யமாகச் சொத்து ஒன்றைப் பிடுங்குவது தான் பிடுங்குகிறோம், பின்னால் தன்னைத் திட்டாமல் முதலில் பார்த்து ரெண்டு வார்த்தை சமாதானம் சொல்லிவிட்டு வந்துவிடலாம்'என்றுதான் அவள் ஆவாரம்பட்டு ஹவுஸுக்குப் போக விரும்பினாள். பிரிந்து அரசாங்க வீட்டுக்கு வந்த நாளிலிருந்து ஃபோனில் கூட அவள் அவரிடம் பேசியதில்லை. இப்போது திடீரென்று பேசினால் அவர் வம்பு பண்ணுவார். அல்லது பேசாமல் ஃபோனை வைத்துவிடுவார், அதனால் முன் தகவல் எதுவும் கூறாமல் அரசாங்கக் காரையும் விடுத்துத் தெரிந்த சிநேகிதி ஒருத்தியின் காரை இரவுல் வாங்கி, தானே ஸெல்ஃப் டிரைவிங் செய்து கொண்டு இருட்டிய பின்பு போய்ப் பார்த்துவிட்டு வருவது என்று தீர்மானித்துக் கொண்டாள் அநுக்கிரகா. டிரைவர் என்று யாரையாவது அழைத்துப் போவதன் மூலம் வீண் வம்பும் வதந்தியும் தான் பரவும். அவள் அரசியல் எதிரிகளுக்குத் தெரிந்தால் 'தந்தையின் நிலத்தை அக்வேர் செய்யும் வகையில் அதிகமான காம்பென்சேஷன் தரச் செய்து உதவவும் யோசனை கூறவும் தான் அவரைக் காணச் சென்றாள்,' என்று கூடப் பரப்பி விடுவார்கள். அதற்கு அஞ்சியே இரவில் செல்ல முடிவு செய்திருந்தாள். கடமை, மந்திரிப் பதவி, கட்சியின் ஏழை எளியோருக்கு உதவும் சோஷலிஸத் திட்டங்கள் எல்லாவற்றையும் மீறி அநுக்கிரகாவின் உள் மனம் அவளைக் கடுமையாகக் குத்திக் காட்டியது.

"இருக்கிற மாளிகையைச் சுற்றி நுழையவும் வழியின்றிக் குடிசை போட்டதைச் சரிசெய்யவே அவளை அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/128&oldid=1265111" இலிருந்து மீள்விக்கப்பட்டது