பக்கம்:அநுக்கிரகா.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

11

பெண்ணை இரண்டாம் தாரமாகக் கட்டிக் கொண்டார். அவளிடம் பிறந்த ஒரே பெண் தான் அநுக்ரகா. மூன்று வயதிலேயே தாயை இழந்துவிட்ட அநுக்ரகா, அவள் தாயைக் கொண்டிருந்தாள். நல்ல அழகு. சொக்கத் தங்க நிறம். துறுதுறுவென்று வண்டுகளாய்க் கண்கள், சுருண்டு கருகருவென்று அடர்ந்த கூந்தல். பிரியமாக வளர்த்துக் கான்வெண்ட் கல்வி அளித்து, மேற்படிப்பை ஆக்ஸ் ஃபோர்டில் படிக்க அனுப்பி வைத்தார். 'அநுக்ரகா', என்று அவளுக்குப் பெயர் வைத்ததே அவளுடைய அம்மாதான். நல்லதை அருளித் தீயதை விலக்கி அநுக்ரகா எனப் பெயராம். முத்தையா இந்தப் பெயர் ஒருமாதிரி இருக் கிறதே என்றபோது அவர் மனைவி இதற்கு அளித்த விளக்கம் இது. “உங்களுக்கு முழுப் பெயரும் 'வாயிலே நுழையலேன்னா, 'அநு'ன்னு சுருக்கிக் கூப்பிட்டுக் கொள்ளுங்களேன், என்றாள் அவள், அநுக்ரகா பிறந்து பெயரிடும்போது இந்த விவாதம் அவர்களுக்குள் நடந்தது.

"சம்ஸ்கிருத மயமாகப் பெயரிடுவது. மலையாளிகளோடு கூடப் பிறந்த பழக்கம், என்று அப்போது அவர் . அவளைக் கிண்டல் கூடச் செய்திருக்கிறார்.

அவள் பெயரோ சம்ஸ்கிருத மயம். வாயைத் திறந் தால் ஆங்கில வாடை. இந்த லட்சணத்தில் இவளை அரசியலில் நுழைத்துக் கனிவண்ணன் போன்ற பேட்டை ரவுடி + அரசியல்வாதிக்குப் போட்டியாக ஈடுபடுத்துவது எப்படி என்று மலைத்தார் முத்தையா. கடைசியில் அதற்கும் ஒரு வழி புலப்படவே செய்தது.

"முள்ளை முள்ளாலேயே எடுக்கவேண்டும் என்று முடிவு செய்தார். கனிவண்ணனின் வளர்ச்சியால் ம.மு.க.வில் . பாதிக்கப்பட்ட மற்றொருவர் இருக்க வேண்டும் என்ற . அநுமானத்தோடு தேடிக் கண்டுபிடித்த போது தான் சைக்கிள் : கடை பொன்னுரங்கம் அகப்பட்டார். மகள் அநுக்ரகாவைப் பொன்னுரங்கத்துக்கு அறிமுகப்படுத்தி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/13&oldid=1255947" இலிருந்து மீள்விக்கப்பட்டது