பக்கம்:அநுக்கிரகா.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

அநுக்கிரகா

கிடந்து இவ்வளவு சிரமப்படுவதற்குப் பதில் கவர்ன்மெண்ட் அக்யுஸிஷனுக்கு இசைந்து காம்பன்சேஷனை வாங்கிக் கொண்டு அதை விற்றுவிட்டு அப்பாவே முந்திக்கொண்டு வேறிடத்தில் குடி போய்விடலாம். கேட்கமாட்டார். அப்பாவுக்கு இது பிரஸ்டிஜ் விஷயம். 'செண்டிமெண்டல் அட்டாச்மெண்ட்' உள்ள வீடு. இதை லேசில் விட இசைய மாட்டார்.

அவள் ஹார்ன் ஒலியெழுப்ப, கேட்டுக்கு அப்பாலிலிருந்து தோட்டக்கார முனியன் வந்து ஆவாரம்பட்டு ஹவுஸின் பிரதான வாசலைத் திறந்தான். எட்டிப் பார்த்துப் புரிந்து கொண்டவனாய், "யாரு? சின்னம்மாங்களா? வாங்கம்மா வாங்க... நல்லாருக்கீங்களா?" —என்று வரவேற்றான் முனியன்.

"அப்பா எங்கே முனியா?"

"உள்ளே ஹால்லே இருக்காரு."

"எப்படி இருக்காரு “ இருக்காரும்மா! யாருட்டவும் ரொம்பப் பேசற தில்லே ..."

அவள் ஹாலுக்குள் நுழைந்தபோது ஒரு சோபாவில் சாய்ந்து இன்னொரு சோபாவில் இரு கால்களையும் நெடுங்குத்தாகத் தூக்கி நீட்டியபடி மேலே சீலிங்கில் தேக்குப் பலகை இழைத்து வார்னிஷ் பூசிய விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவள் உள்ளே நுழைந்ததைக் கவனிக்கவில்லை. அவரது கவனத்தை அவளால் ஈர்க்கவும் முடியவில்லை. கண்கள் என்னவோ நிலை குத்தினாற்போல அலங்கார வேலைப்பாடுகளும்; சாண்ட்லியர்களும் நிறைந்த அம்மாளிகையின் விட்டத்திலேயே இருந்தன.

"உள்ளே வரலாமா அப்பா?"

பதில் இல்லை. மறுப்பும் இல்லை. அங்கிருந்த தனது படங்களில் தோற்ற மறைவு எழுதியிருந்ததை அவளே பார்த்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/130&oldid=1265113" இலிருந்து மீள்விக்கப்பட்டது