பக்கம்:அநுக்கிரகா.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

அநுக்கிரகா

"நெவர்! நெவர்! இந்த வீட்டை விட்டு நான் வெளியேர்றதா இல்லை. சேலன்ஜ் பண்ணுவேன். ரிட் போடுவேன். ஸ்டே வாங்குவேன். தகராறு பண்ணி மீதி உள்ள சொத்தைப் பூரா இதுக்காகவே செலவழிச்சு இதிலேயே செத்தாலும் சாவேனே ஒழிய வெளியேறுகிற பேச்சே இல்லை."

“இந்த வயசு காலத்திலே அடம்பிடிக்கிறிங்களே, காலம் மாறுகிறது. உங்க எண்ணத்தை மாத்திக்குங்க."

"இதிலே உன்னை மாதிரி ஓட்டுத் திருடங்களான அரசியல்வாதிகளோட அட்வைஸ் எனக்குத் தேவை இல்லே."

"அப்போ எனக்கு உங்க முடிவான பதில்தான் என்ன?"

உடனே முத்தையா துள்ளி எழுந்தார். படுக்கை அருகே இருந்த டார்ச்சைக் கையில் எடுத்துக் கொண்டார்.

“எங்கூட வா... பதில் சொல்றேன்."

அவள் அவரைப் பின் தொடர்ந்தாள்.

வாசல் கேட் அருகே வந்ததும் டார்ச் ஒளியைப் பாய்ச்சி, "இதுதான் என் பதில்! நல்லாப் பார்த்துக்கோ" —என்றார்.

அவள் பார்த்தாள். 'அரசியல்வாதிகளும் பிச்சைக் காரர்களும், பெரு வியாதியஸ்தர்களும் கண்டிப்பாக இந்தப் பங்களாவிற்குள் நுழையக் கூடாது."

அவள் படித்து முடித்து அவரை நோக்கித்திரும்பியதும், "ஐ ஸே கெட் அவுட்... ப்ளீஸ் கெட் அவுட்" —என்று நிர்த்தாட்சண்யமாக அவளிடம் சொன்னார் முத்தையா.

(முற்றும்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/134&oldid=1265117" இலிருந்து மீள்விக்கப்பட்டது