பக்கம்:அநுக்கிரகா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

அநுக்கிரகா

"அநுக்ரகாங்கிற போரோட அர்த்தம் வர்ற மாதிரி இருக்கணும்பா. அது முக்கியம். வேற அர்த்தம் வர்ற மாதிரிப் பேரு எனக்குப் பிடிக்காது.

"அர்த்தம் கிர்த்தம்லாம் நமக்குத் தெரியலீங்க. புலவர் ஒருத்தர் இயக்கப் பேச்சாளரா இருக்காருங்க, அவரை இட்டாந்தாக் கச்சிதமாக பேர் சொல்லிடுவாருங்க.."

"யாருப்பா அது?

"கடும்பனூர் இடும்பனார்.

"அவர் பேரே வாயிலெ நுழையற மாதிரி இல்லியேப்பா?"

"குழந்தைகளுக்கு மேடைகளிலே பேர் வைக்கிறதுக்கே எங்க தலைவர். அவரைத்தான் கன்ஸல்ட் பண்ற வழக்கம்..

சரி கூட்டிக்கிட்டு வா, பார்க்கலாம்.

பொன்னுரங்கம் சைக்கிளில் போய்ப் புலவரைக் கூட்டிக் கொண்டு வந்தான். அரும்பு மீசையும் கடுகடுப்பான முகமும், குண்டு குண்டு கண்களுமாகத் தரையைப் பெருக்குகிற மாதிரித் தாழ உடுத்திய அரை வேஷ்டியும், மல் ஜிப்பாவும், தோளில் துண்டுமாக ஒரு மத்திய வயது மனிதர் வந்து, ' வணக்கங்க' என்று எதிரே நின்றார்.

"எங்கே வேலை பார்க்கிறீங்க?"

"ஆர். டி. எஸ். மேனிலைப் பள்ளியில் தலைமைத் தமிழாசிரியர்.

"உம்மாலே பொதுக் கூட்டங்களுக்கும் போய்க்கிட்டு ஸ்கூல் வேலையையும் எப்படிப் பார்க்க முடியுது?"

“பகலில் பள்ளி. இரவில் இயக்கம் ஐயா!

"சரி! அநுக்ரகாங்கிறதுக்கு வாயிலே. நுழையற மாதிரி ஒரு தமிழ்ப் பேரைச் சொல்லும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/16&oldid=1255958" இலிருந்து மீள்விக்கப்பட்டது