பக்கம்:அநுக்கிரகா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

15

"அவ் வடமொழிப் பெயருக்குத் தீமைகளை விலக்கி நன்மைகளை அருளும் ஆற்றல் என்று பொருள் ஐயா!"

"நீர் சொல்றது ஒரு முழு நீள வாக்கியம். பேருங்கிறது ஒரு வார்த்தை ரெண்டு வார்த்தையிலே இருக்கணும்! வாக் கியமா இருக்கக்கூடாது.

"அருட்செவ்வி அல்லது அன்புச்செல்வின்னு வச்சிடலாங்க."

"யாரோ ஒரு சாமியார்ப் பொம்பளைன்னு நினைச்சிட போறாங்க.

"அப்போ உங்களுக்குப் பிடிக்கிற பேர் எப்படி அமையணும்னு நீங்களாவது ஒரு கோடி காட்டுங்களேன்?

"அநுக்ரகாங்கிற பேர் காலஞ்சென்ற என் மனைவி வைத்தது. அதுதான் எனக்குப் பிடிக்குது.. பொன்னுரங்கம் தான் அதை மாத்தியாகணும்கிறான்:

"மாத்த வேண்டாங்க. . அதையே தமிழாக்கி 'அநுக்கிரகா'-ன்னு கூப்பிடுங்களேன்?

"ஒரு 'கி' போட்டாப் போதுமா?" 

"இலக்கணப்படி போதும்.

"சரி; இடும்பனூர் கடும்பனாரே!

"பிழை! பிழை! என் பெயர் கடும்பனூர் இடும்பனார்."

முத்தையா சிரித்தபடியே பொன்னுரங்கம் ஜாடை காட்டியதைப் புரிந்துகொண்டு, ஒரு கவரில் ஐம்பது ரூபா யைச் செருகிப் புலவரிடம் நீட்டினார்.

எதுக்குங்க.இதெல்லாம்?"
"அட சும்மா இருக்கட்டும். வச்சிக்குங்க!"

புலவர் கவரை வாங்கிக் கொண்டு, வணக்கத்தோடு விடைபெற்றார். "தமிழ்லே பேசக் கத்துக் கொடுக்கவும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/17&oldid=1255959" இலிருந்து மீள்விக்கப்பட்டது