பக்கம்:அநுக்கிரகா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அநுக்கிரகா:

இந்த ஆளையே ஏற்பாடு பண்ணிடு பொன்னுரங்கம், இவரை மாதிரி முரண்டு பண்ணாமே வளைஞ்சு கொடுக்கிற ஆள்தான் நமக்குத் தேவை."

பொன்னுரங்கமும் சரி என்றான். அரசியல் பிரவேசத்துக்காக அநுக்கிரகாவின் பெயரை மாற்றுவதில்லை என்றும், அவசியமானால் மாம்பழக்கண்ணனுக்கும் ஏதாவது 'சம்திங்' கொடுத்து உறுப்பினர் ஆகிவிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

"புலவரு சொல்ற அர்த்தத்தைப் பார்த்தா இந்தப் பேரே அரசியலுக்குப் படு பொருத்தமாக இருக்கும் போலத் தெரியுதேப்பா! தீமைகளை விலக்கி நன்மைகளை அருளும் சக்தி'ன்னு அநுக்கிராவிற்கு - அர்த்தம் சொல்றாரு. அரசியல்லே இப்போ இருக்கிற தீமைகளை விலக்கிப் புதிய நன்மைகளை அருளப் போகிறவள்னு இதற்கே விளக்கம் சொல்லிக்கலாம்," என்று வி. டி முத்தையா கூறிய வியாக்கியானம் சைக்கிள் கடைப் பொன்னுரங்கத்திற்கு புரியவில்லை. ஆனாலும் பெரிதாக அதெல்லாம் புரிந்துவிட்டதைப் போலத் தலையை ஆட்டி வைத்தான். அவரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவன் கட்சி அலுவல கத்துக்குச் சென்று, மாம்பழக்கண்ணனுக்கு இரு நூறு ரூபாய் லஞ்சமும் அநுக்கிரகாவின் உறுப்பினர் விண்ணப்பக் கட்ட பணத்துக்காக ரூபாய் இரண்டும் கொடுத்து உறுப்பினராக்கியதும், உறுப்பினர் அட்டையை உடனே எழுதி வாங்கி வந்ததும் நடந்து முடிந்த அத்தியாயங்கள்.

டென்னிஸ் உடையிலிருந்து புடவைக்கு மாறிய அதுக்கிரகா தன் தந்தையின் முன்னிலையிலே: பொன்னுரங்கத்திடமிருந்து உறுப்பினர் அட்டையை வாங்கிக் கொண்டு, "வெரி கைண்ட் ஆஃப் பூ பொன்னுரங்கம் என்றபோது, சர். வி. டி. முத்தையா குறுக்கிட்டு 'நன்றின்னு தமிழ்லே . சொல்லணும் அநு. பொன்னுரங்கத்திட்டே போய் இங்கிலீஷ்லே சொன்னா எப்படி? என்று மகளைப் பிரியமாகக் கண்டித்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/18&oldid=1255960" இலிருந்து மீள்விக்கப்பட்டது