பக்கம்:அநுக்கிரகா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

அநுக்கிரகா

ஒப்புக் கொண்டாலும் வேறுசில ஆட்சேபணைகளையும் தெரிவித்தான்.

"நீங்க சொல்றதெல்லாம் சரிதான். இருத்தாலும் அழகாகவும் இளமையாகவும் இருக்கிறவங்களைப் பத்திச் சுலபமா அவதூறுகளைக் கிளப்பி விட்டுடலாம், அதுவும் அவங்க பொம்பளைங்களா வேற இருந்துட்டாங்களோ அது இன்னும் சுலபம்."

"கனிவண்ணன் அப்படி செய்யக்கூடிய ஆள்தானா?

"கனி வண்ணன் மட்டும் இல்லீங்க! எந்த அரசியல்வாதியுமே. இதுக்கெல்லாம் . விதிவிலக்கு. இல்லேன்னு சொல்லலாம்; .

"முடிஞ்சதைப் பண்ணிப் பார்க்கட்டுமே ; சமாளிக்கலாம். சும்மாவா விட்டுடப் போறோம்?

"சமாளிக்கத்தான் போறோம். ஆனா உங்களுக்கு இதெல்லாம் முன்னாடியே. தெரிஞ்சுக்கறது . நல்லதில்லையா? அதான் சொல்றேன்."

"பணச் செலவைப் பத்திக், கவலைப்படாதே பொன்னுரங்கம்! இதிலே என்ன செலவானாலும் அந்தப் பயல் கனி வண்ணனைப் பத்தி ஈவு இரக்கமே. காட்டாமே தொலைச்சுப்புடணும் தொலைச்சு. என்னை மாதிரி ஒரு பரம்பரைப் பெரிய மனுஷனை-- லண்டன், ரிட்டர்ன்ட் ஆளை மூணு நாள் வாசல்லே காக்கப் போட்டு அவமானப் படுத்தினதுக்கு அவனைப் பழிவாங்கியே ஆகணும்."

"செஞ்சுடலாங்க, ஆனாக் கொஞ்சம் நாளாவும். அதுக்கு உங்களுக்குத்தான் பொறுமை வேணும்."

"இதோ பாரு. பொன்னுரங்கம்!. இப்போ எனக்கு வயது எண்பது... அவனைக் கீழே இறக்கிட்டு அநுவை . 'எ. எல். ஏ. ஆக்கிப் பார்க்காமே நான் சாகப் போற தில்லே."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/20&oldid=1255962" இலிருந்து மீள்விக்கப்பட்டது