பக்கம்:அநுக்கிரகா.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா, பார்த்தசாரதி

21

-ரங்கம் இதற்காக ஆவாரம்பட்டு ஹவுஸ் ஏ. சி. அறையில் முத்தையா முன்னிலையில் அநுக்கிரகாவுக்கு ஒரு ஸ்பெஷல் கிளாஸே நடத்தினான். 'டூஸ் அண்ட் டோண்ட்ஸ்' பற்றி அநு அவனிடம் ஒரு பாடமே படித்தாள்.

"யாராவது ஒரு தொண்டனை அல்லது கட்சி ஊழியனை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்தினால் நீங்க உடனே அந்தத் தொண்டனையோ ஊழியனையோ பார்த்து முகமலர்ச்சியோடவும், புன்னகையோடவும், 'வணக்கம், தலைவரே'ன்னு சொல்லணும்,"

அதெப்படி? 'பார்க்கிற ஆளெல்லாம் தலைவராயிடுவாங்களா?"

"அது அப்படித்தான்! தொண்டருங்களைக் குஷியாவச்சுக்க அது தான் ஈஜியான வழி. முன்னெல்லாம். காந்தி, நேரு போன்ற பெரிய தலைவருங்களைத்தான் 'தலைவரே'ன்னு சொன்னாங்க. இப்போ நெலைமை தொண்டருங்க இல்லாட்டித் தலைவரே இல்லே.. அதுனாலே தலைவருங்க தொண்டருங்களைப் பார்த்துப் பேசறப்போ, 'வணக்கம் தலைவரே'ன்னு சொல்லணும். 'மறந்துகூட இங் கிலீஷ்ல தஸ் புஸ்ஸுன்னு பேசப்படாது.

"சரிங்க தலைவரே!'

"ஏதேது? உடனே புடிச்சிக்கிட்டீங்களே?"

அநுக்கிரகா சிரித்தாள். தந்தையார் அகமகிழ்ந்தார்.

"நெல்லுப்பேட்டை மண்டி மைதானத்திலே அம்மா பேசிடறீங்களா? அல்லது சும்மா முன்னிலைன்னு மட்டும் போட்டுப் போஸ்டர் அடிச்சிடட்டுமா?

இதைக் கேட்டு அநுக்கிரகாவிற்கு 'ஒன்றும் புரியவில்லை. முத்தையாதான் முதலில் பொன்னுரங்கத்திடம் சந்தேகம் கேட்டார்: "முன்னிலைன்னா என்னப்பா?"

அநு.—2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/23&oldid=1256067" இலிருந்து மீள்விக்கப்பட்டது