பக்கம்:அநுக்கிரகா.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

23

"முன்னிலை வேண்டாம்ப்பா? அது யாராச்சும் பேசத் தெரியாத ஆளைப் போட்டுக்க, நெல்லுப் பேட்டை மைதானம் இராசியான எடம். மொத மொதலா அங்கே அநுவைப் பேசவே விட்டுறலாம், என்றார் முத்தையா.

"ஆளுயரப் போஸ்டர் அம்மா படத்தோட போட்டுறலாங்களா?

“அதெல்லாம் மாமூல் எப்பிடியோ. அப்பிடிப் பண்ணிக்க.

"எந்த லயன்லே பேசறதுங்கிறத்துக்காகப் புலவரை வரச் சொல்லட்டுங்களா?"

"செய்யி! இப்போ போஸ்டர் போட என்ன செலவாகும்?

'"இருநூறு போஸ்டர் போதும்ன்னு நெனைக்கிறேன். போஸ்டருக்குப் பத்து ரூபா. ரெண்டாயிரம் இருந்தா முடிச்சுடலாம்.

உடனே முத்தையா பொன்னுரங்கத்திடம் இரண்டா யிரம் ரூபாயை எடுத்துக் கொடுத்தார். அநுக்கிரகாவின் (நெகடிவ்' கிடைக்கிற ஸ்டுடியோ விலாசத்தையும் குறித்துக் கொடுத்தார்,

அநுவின் டி.மு.க. அரசியல் பிரவேசம் பற்றி.....


4

முத்தையா எதிர்காலக் கனவுகளில் திளைத்து மகிழ்ச்சியாயிருந்தாலும் லேடீஸ் கிளப்பில் அதுவை அவள் சிநேகிதிகள் துளைத்தெடுத்துவிட்டார்கள். இத்தனைக்கும் அவள் அந்த லேடீஸ் கிளப்பின் துணைத் தலைவியாக வேறு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாள், அவள் கட்சியில் சேர்ந்தது சிலருக்குப் பிடிக்கவில்லை . புருவங்கள் நெரிந்தன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/25&oldid=1256077" இலிருந்து மீள்விக்கப்பட்டது