பக்கம்:அநுக்கிரகா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

அநுக்கிரகா

அந்த மாதர் சங்கத் தலைவியாக இருந்த லேடி ரங்க நாதம் என்ற அம்மையார் நகரத்திலேயே பெரிய அரிஸ்டா கிரட் குடும்பத்தின் தலைவி, பெரிய கன்ஸர் வேடிவ் நபர். அவள் அநுவைக் கண்டித்தாள்:

"உன்னைப் போல டீஸண்ட் ஃபேமிலியிலே வந்தவளுக்கு இதெல்லாம் லாயக்காக இருக்காது அநு! யார் உனக்கு 'இல் அட்வைஸ்' பண்ணினாங்க...? அரசியல் சாக் கடையிலே போய்க் காலை விட்டுருக்கியே பெண்ணே?

"சாக்கடையையும் என்னிக்காவது யாராவது இறங்கித் துணிந்து சுத்தம் பண்ணித்தானே ஆகணும்?

அது என்னாலேயும் உன்னாலேயும் முடியற காரியமில்லே. எத்தனை பேர் எத்தனை தரம் சுத்தம் பண்ண முயற்சி செஞ்சாலும் சாக்கடை சாக்கடையாத்தான் இருக்கும் அநு!

அப்பிடி எல்லாருமே விட்டுட்டா எப்பிடி? யாராவது துணிஞ்சுதானே ஆகணும்?

"அது நம்ம வேலை இல்லே அநு!

"அதனோட கொசுக்கள், நாற்றம், கிருமிகள் எல்லாம் நம்மையும் பாதிக்கிறபோது நாம் மட்டும் அதைக் கண்டுக்காமே மூக்கையும் கண்களையும் மூடிக்கிட்டு அது நம்ம வேலை இல்லே'ன்னு. போயிட்டா எப்படி அம்மா? சாக்கடையையும் என்னிக்காவது யாராவது இறங்கித் துணிந்து சுத்தம் பண்ணித்தானே ஆகணும்?

"உன்னை மாதிரி ஆக்ஸ்ஃபோர்டிலே படிச்ச ஆவாரம் பட்டு ஹவுஸ் பெண் அதற்குத் தேவையில்லை என்பது என் அபிப்பிராயம்."

"நாமே ஒதுங்கினா. அவங்களும் ஒதுக்கிடுவாங்க. ஒதுங்கக் கூடாதுங்கிறது என் அபிப்பிராயம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/26&oldid=1256085" இலிருந்து மீள்விக்கப்பட்டது