பக்கம்:அநுக்கிரகா.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

25

ஒதுங்காமே நெருங்கினாலும் உன்னாலே அங்கே எதுவும் பண்ண முடியாது.

" நான் அப்பிடி நெனைக்கலே.

"உன்னோட ம.மு.க. அரசியல் பிரவேசம்: இங்கே - மாதர் சங்கத்திலே கூட. உன்னைப் பாதிக்கும். எல்லாரும் ஒரு தினுசாப் பார்ப்பாங்க."

“ஐ காண்ட் ஹெல்ப் இட்.

சீக்கிரமே உன்னைப் பிரஸிடெண்ட் ஆக்கிட்டு நான் வயசாச்சேன்னு ஒதுங்கிக்க நெனைச்சேன் அநு! இப்ப அது முடியாது போல இருக்கு.

இதைக் கேட்டு அநு யோசனையில் ஆழ்ந்தாள். தன் தந்தையின் விருப்பத்துக்கு இணங்கத் தான் அரசியலில் ஈடுபட நேர்ந்ததை அந்த அம்மாளிடம் சொன்னால் அவள் தந்தையிடமே நேரில் போய் இதுபற்றி விசாரிப்பாள். வயதான காலத்தில் தந்தைக்கு வீணாகக் கோபம் வரும். அதெல்லாம் வேண்டாமென்று நினைத்ததால் உண்மைக் காரணத்தை அவள் யாரிடமும் சொல்ல விரும்பவில்லை. சில சமயங்களில் தன் அரசியல் பிரவேசம் அநுவுக்கே. கூட எரிச்சலாகத்தான் இருந்தது. அழுக்குச் சட்டையும் இடுப்பில் கைலியும் சீவாத - பரட்டைத்தலையுமாக வருகிற. ஆட்களிடம், “வணக்கம் . தலைவரே! என்று பல்லை இளித்துக்கொண்டு நிற்பதைவிட நுனி நாக்கால் ஆங்கிலம் பேசும் நாகரிக சமூகத்திடம் பழகுவதும் நாசூக்காக வாழ்வதும் எத்தனையோ மடங்கு மேலான காரியம் தான். கடும்பனூர் இடும்பனாரையும் சைக்கிள் கடைப் பொன்னுரங்கத்தையும் , கட்டி மாரடிக்க வேண்டிய அவசியம் நாகரிக வாழ்வில் இல்லை . பலரைக் கவரச் சிரிப்பையும் , பணத்தையும் சிக்கனமாகச் செலவழித்தாலே அங்கு போதும். ம.மு.க.விலோ தான் படித்தவள் என்ற ஒரு காம்ப்ளெக்ஸிலிருந்து விடுபடவும் அந்தக் காம்ப்ளெக்ஸ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/27&oldid=1256089" இலிருந்து மீள்விக்கப்பட்டது