பக்கம்:அநுக்கிரகா.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அநுக்கிரகா

“அதெல்லாம் நெல்லுப்பேட்டை மைதானத்திலே எடுபடாதும்மா! பாலிஸியைச் சொல்றதுன்னு வந்துட்டா ரொம்பச் சங்கடம். அது நமக்கும் புரியாது. மக்களுக்கும் 'பிடிக்காது."

பின்னே எதைத்தான் பேசறதாம்?

"நெல்லுப்பேட்டை வட்டாரத்திலே நம்ம அரசியல் எதிரிங்க யார் யாரோ அவங்களை எல்லாம். புகுந்து விளாசணும்! அப்பத்தான் ஜனம் தங்கி நின்னு கேட்கும்;"

அது எப்படிப் புகுந்து விளாசறது? திட்டறதா?

"திட்டறதாகவும் இருக்கப்படாது! திட்டற மாதிரியும் இருக்கப்படாது. ரொம்பத் திட்டிட்டோமோ என்று நமக்கே சந்தேகம் வரும்போது, 'அரசியல் ரீதியாக விமர்சித்தாலும் தனிப்பட்ட முறையில் எனக்கு அவர் மேல் மரியாதை உண்டு'ன்னு ஒரு லயனை ஊடாலே விட்டுக்கணும்."

"எப்பிடி? எப்பிடி? இன்னொரு தரம் சொல்லுங்க., மனசுலே ஆகலே.

புலவர் ரிபீட் செய்தார்.

அநுக்கிரகாவிற்கு அந்த அரசியல் கட்சி நடை முறைகள் மிகவும் வேடிக்கையாக இருந்தன. திட்டுவதிலும் திட்டும் போதான தற்காப்பு ஏற்பாடுகளுக்கும் புலவர் சொல்லிக் கொடுத்த வழிகள் பிரமாதமாகவும், பக்காவாகவும் இருந்தன. இவ்வளவு அற்புதமான மேடைப் போர் முறைகளை அவள். இதுவரை எங்கும் ' கேள்விப்பட்டது கூட இல்லை. எல்லாம் அநுபவக் களஞ்சியங்களாகவே இருந்தன.

"கூட்டம் களை கட்டலேன்னாலோ எதிரிகளைச் 'சண்டைக்கு இழுக்கணும்னாலோ நம்ம ஆளுங்களை விட்டு நாமே கலாட்டா, கல்லெறிக்கு 'செட் அப்' பண்ணணும். அதும் மூலமா ஒரு விளம்பரம் கிடைக்கும். இல்லாட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/30&oldid=1256099" இலிருந்து மீள்விக்கப்பட்டது