பக்கம்:அநுக்கிரகா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

31

-தாச்சு. தெரியுமா? 'ஆவாரம் பட்டு ஹவுஸ்" பாலிடிக்ஸ்ல தீவிரமா இறங்கப் போகுது என்று எங்கும் பரபரப்பாகி இருந்தது. ஊரிலேயே ஹாட் நியூஸ் இதுதான்.

அன்று காலையில் கோயிலில் போய் விசேஷ அர்ச்சனை வேறு செய்துவிட்டு வந்தார் முத்தையா. கூட்டத்திற்குக் கட்டிக்கொண்டு போகவேண்டிய புடவையைத் தேர்ந் தெடுக்கவே அநுக்கிரகாவும், முத்தையாவும் அரை நாள் செலவழித்தார்கள். விஃபான், ஜார்ஜெட், வாயில் புடவை களை முதல் ரவுண்டிலேயே நிராகரித்தார் முத்தையா.

"அழகா ஆரணி, காஞ்சீபுரம், கொள்ளேகாலம்னு கைத்தறிப் பட்டுப் புடவையைக் கட்டிக்கோ, கைத்தறியிலேதான் 'வோகல் டச்' கிடைக்கும், கைத்தறிக்கும் ம, மு. க. கொள்கைக்கும் கூட நெருக்கம் அதிகம் —என்றார் முத்தையா,

பளீரென்று கையகலச் சரிகைக் கரை போட்ட சிவப்புக் காஞ்சீபுரம் பட்டுப் புடவை ஒன்றை அவரே தேர்ந்தெடுத்தும் கொடுத்தார். அநுக்கிரகாவுக்கு அது அவ்வளவாகப் பிடிக்கவில்லை .

“இது ரொம்பப் பளீர்னு இருக்குப்பா! இத்தனை பெரிய ஜரிகைக் கரை இல்லாம ஸிம்ப்பிளா ஒண்ணை எடுங்க — என்றாள் அவள் -

பளீர்னுதான் இருக்கணும் அம்மா! உனக்கொண்ணும் தெரியாது. பளீர்னு இருந்தாத்தான் கூட்டத்துக்கு எடுக்கும்." திரும்பத் திரும்ப இப்படி முத்தையா வற் -புறுத்தவே வேறு வழியில்லாமல், அவள் அந்தச் சிவப்புப் பட்டுப் புடவையையே கட்டிக்கொள்ள இசைந்தாள்.

மாலை நான்கு மணி சுமாருக்கு ஏதோ வேலையாகத் தன்னைத் தேடிவந்த பொன்னுரங்கத்தை விசாரித்தபோது, அவன் அந்தச் சிவப்புப் பட்டுப் புடவை கூடவே கூடாது என்றான், 'பப்ளிக் மத்தியிலே பிரமாதமா வைர நகை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/33&oldid=1256258" இலிருந்து மீள்விக்கப்பட்டது