பக்கம்:அநுக்கிரகா.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அநுக்கிரகா

சரிகைக்கரை போட்ட பட்டுப் புடவைன்னு கட்டிக்கக் கூடாது. சிம்பிளா போய் நிற்கணும்னு தலைவர் அடிக்கடி சொல்லுவாரு, இல்லாட்டி 'மேட்டுக்குடி மக்கள்' னு கெட்ட பேராயிடும். சிம்பிளா ஏதாச்சும் கரை போட்ட ஒரு வெள்ளைச் சேலையைக் கட்டிக்கிட்டாப் போதுங்க, இல்லாட்டா நம்ம பணத்தையும் பவிஷையும் காட்டிப் பகட்டறோம்னு கெட்ட பேராயிடும்" -- என்றான் பொன்னுரங்கம், அநுக்கிரகாவுக்கும் பொன்னுரங்கம் சொல்லியது தான் சரி என்று பட்டாலும் அப்பாவுக்குப் பயந்து தயங்கினாள்,

“இந்தா பொன்னுரங்கம்! முதல்லே உன் வாயில் பெனாயிலை ஊத்திக் கழுவு! என் மக இன்னும் கல்யாண மகாத கன்னிப் பொண்ணு. அதுக்குள்ளே வெள்ளைச் சேலை கட்டச் சொல்றியே! துச்கிரிப் பய பேச்சுப் பேசாதே, என்று முத்தையா அவன் கூறியதை 'ஸெண்டி மெண்டலாக' எடுத்துக் கொண்டு கூப்பாடு போட ஆரம் பித்து விட்டார். பொன்னுரங்கம் நடுங்கிப் போனான்.

நடுக்கத்தோடு நடுக்கமாக உடனே பொன்னுரங்கம் காலில் விழாத குறையாக அவரைக் கெஞ்சி மன்னிப்புக் கேட்டான், "தப்பா ஒண்ணும் சொல்லிடலீங்க! நெல்லுப் பேட்டை மைதானம் மாதிரிப் பாமர மக்கள் நெறைஞ்ச பகுதியிலே கையகல ஜரிகைக் கரை போட்ட பட்டுப் புடவையைக் கட்டிக்கிட்டு மேடை ஏறினீங்கன்னா, ஒரு தினுசாப்படும்! ஏற்கெனவே இந்த மாதிரிப் பெரிய வசதி யான குடும்பத்துலேருந்து எங்க கட்சிக்குள்ளே சேர்றவங் களைப் பத்திக் கட்சி ஊழியர்கள் மத்தியிலே பலமான அயிப்பிராய பேதம் இருக்கு. வெறும் வாயை மெல்றவங் களுக்கு அவல் கிடைச்சமாதிரி ஆயிடுமோன்னு தான் சொல்றேன்,"

"இருக்கலாம்ப்பா! ஆனா அதுக்காக நாங்க பரதேசி வேஷம் போட முடியாது! உங்க மாம்பழக் கண்ணனும் கனிவண்ணனும் ஏழையின்னா சொல்றே? உங்க கட்சியிலே .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/34&oldid=1256259" இலிருந்து மீள்விக்கப்பட்டது