பக்கம்:அநுக்கிரகா.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

33

இல்லாத பணக்காரனா வெளியிலே இருக்கான்? எளிமைங்கிற பேரிலே பஞ்சப் பரதேசி வேஷத்தோட என் மகள் மேடை ஏற முடியாது. முடிஞ்சவரை டீஸண்டா உடுத்திக் கிட்டு வைரத்தோடு போட்டுக்கிட்டாத்தான் வருவா— என்று அடித்துப் பேசினார் முத்தையா.

தான் கூறுவதன் உள்ளர்த்தத்தை அவர் புரிந்து கொள்ளாததை உணர்ந்து பேசாமல் விட்டுவிட்டான் பொன்னுரங்கம், நியாயத்தைச் சொல்லப்போகத் தன்னையே தப்பாகப் புரிந்து கொள்கிறாரே என்று அவர் மேல் வருத்தமாயிருந்தது அவனுக்கு, இந்தக் காலத்தில் எல்லாக் குடும்பப் பெண்களும் சிறுகரை போட்ட வெள்ளை வாயில் புடவையை சகஜமாகக் கட்டிக் கொள்வதைப் பார்த்துத் தான் வித்தியாசமில்லாமல் அவளுக்கும் அந்த யோசனையைச் சொன்னான் பொன்னுரங்கம். வெள்ளைச் சேலை யோசனையை அநுக்கிரகா தப்பாக எடுத்துக்கொள்ள வில்லையானாலும் முத்தையா பிலுபிலுவென்று பிடித்துக் கொண்டு அவனைச் சாடித் தீர்த்து விட்டார். ஏண்டா யோசனை சொன்னோம் என்றாகிவிட்டது பொன்னுரங்கத்துக்கு. அன்று முழுவதும் அவரைப் பார்க்கவே பயப் பட்டான் அவன்.

கடைசியில் முத்தையாவையும் விரோதித்துக் கொள்ளா மல், பொன்னுரங்கத்தையும் விரோதித்துக் கொள்ளாமல் அதிகம் ஜரிகை இல்லாத ஒரு பட்டுப் புடவையைக் கட்டிக் கொண்டு கூட்டத்துக்குச் சென்றாள் அநுக்கிரகா,

அந்த மைதானத்தின் மூலையில் யாருக்கும் தெரியாமல்' காரை நிறுத்திக்கொண்டு காருக்குள் இருந்தபடியே மகளின் பேச்சைக் கேட்கப் போவதாக முத்தையா சொல்லியிருந்தார். மகளை ஏ, சி. செய்த மெர்ஸிடீஸ் பென்சில் அனுப்பி வைத்துவிட்டுத் தாம் ஒரு சாதாரண பியட்டில் பின் தொடர்ந்தார் முத்தையா. பொன்னுரங்கத்தையும் மகளோடு கூடப் போகச் செய்திருந்தார். பொன்னுரங்கத்துக்குக் கப்பல் போல் ஏ. ஸி. செய்த பெரிய காரில் நெல்லுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/35&oldid=1256263" இலிருந்து மீள்விக்கப்பட்டது