பக்கம்:அநுக்கிரகா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா, பார்த்தசாரதி

35

உங்களை ப்ரப்போஸ் பண்ணி நின்னாக் கூட ஸ்லம் ஒட்டு விழணுமே? இந்தத் தொகுதியிலே மட்டும் அறுபது ஸ்லம்ஸ் இருக்கும்மா...

"சில பெரிய நகரங்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்தியாவே ஒரு பெரிய ஸ்லம்தான் தலைவரே!"

முதல்லே இப்படிப் பேசறதை நிறுத்துங்க. இது தான் மேட்டுக்குடி மனப்பான்மைங்கிறது.

"சரி, பேசலே. பின்னாடியே அப்பா நம்மை ஃபாலோ பண்றாரு. நான் இறங்கி நடந்தா அவரு கூப்பாடு போடு வாரு. ஹி மே நாட் லைக் இட்..

"பார்த்தீங்களா. பார்த்தீங்களா? மறுபடி இங்கிலீஷ்லே பூந்துட்டீங்களே? கூட்டத்திலேயும் ஏதோ ஞாபகத்திலே இங்கிலீஷ்லே பேசிடாதீங்க. முதல்லேயே பேரை ரிப்பேராக்கிடுவாங்க. நான் இங்கே எறங்கிக்கறேன். நீங்க மட்டும் வேணா மைதானத்துவரை கார்ல போயி இறங்கிக்குங்க. எனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லே.

சொல்லிக்கொண்டே டிரைவரிடம் சொல்லிக் கீழே இறங்கிக் கொண்டான் பொன்னுரங்கம். அவனுடைய முன் ஜாக்கிரதையும் பயமும் சிறுபிள்ளைத்தனமாக அவளுக்குத் தோன்றின. வசதிகளைத் தேடிக் குவிக்கவே அரசியலில் இறங்கியிருக்கும் இவர்கள் வசதிகளையும் பணத்தையும் பண சௌகரியங்களையும் வெறுப்பது போலவும், இருபத்து நாலு மணி நேரமும், ஏழைகளுக்கா கவே உயிர் வாழ்வது போலவும் நடிப்பது மிக மிக வேடிக்கையாக இருந்தது. எல்லாத் தரப்பு. அரசியல்வாதிகளுமே இப்படி ஒரு 'பாவனா சோஷியலிசத்தைப்' பழகியிருந் தார்கள். பழக்கியிருந்தார்கள்.

ஆனால் பாமர ஜனங்கள் என்னவோ இன்னும் ரயிலில் வருகிறவனை விட விமானத்தில் பறந்து வருகிறவனைத் தான் அதிகம் மதித்தார்கள். வெறும் காரில் வந்து இறங்குகிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/37&oldid=1256268" இலிருந்து மீள்விக்கப்பட்டது