பக்கம்:அநுக்கிரகா.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

37

அவளிடம் கொண்டுவந்து நீட்டி, "ஒரு பேர் சூட்டுங்க அண்ணி! --என்றார்கள்.

அவள் தயங்கினாள். உடனே பொன்னுரங்கம் ஓடி வந்து அவள் காதருகே முணுமுணுத்தான் ; "குழந்தையைச் சிரிச்ச முகத்தோட வாங்கி மைக்கிலே போயி நின்னு 'தமிழ்ச் செல்வி'ன்னு பேர் சூட்டுங்க. எல்லாரும் கைத் தட்டுவாங்க."


6

நல்லவேளை, பொன்னுரங்கம்' உரிய நேரத்தில் அநுக்கிரகாவை எச்சரித்திருந்தான். இல்லை என்றால் மூக்குச்சளி ஒழுகுகிற அந்த அழுக்குக் குழந்தையைக் கைகளால் வாங்கவே கூசி, ' நான்ஸென்ஸ்! வொய் ஷூட் ஐ?' - என்று பொரிந்து தள்ளியிருப்பாள். அவளுடைய பெரிய பலவீனம், பல ஆண்டு - ஆங்கிலப் பள்ளிப் படிப்பும் இங்கிலாந்து வாசமும் சேர்ந்து, இன்னமும் கூட உணர்ச்சிகரமான நேரங்களில் ஆங்கிலமே பேச வந்தது. பலவற்றிற்குச் சட்டென்று தமிழ்ச் சொற்களே கிடைக்காமல் திண்டாடினாள் அவள், பல சமயங்களில் இப்படி நேர்ந்தது. புலவரும் பொன்னுரங்கமும் அவள் தந்தையும் - அரும்பாடுபட்டு அவ்வப்போது அவளை உஷார்ப்படுத்தித் தமிழுக்குக் கொண்டு வந்தார்கள். தமிழில் பேசும்படி ஞாபகப்படுத்தினார்கள்.

"ஐயாம் அஃப்ரைட் டு ஸே போன்ற டிபிகல் இங்கிலீஷ் பிரயோகங்களும், எதற்கெடுத்தாலும் 'ப்ளீஸ்' போடுகிற, 'குட் யூ ப்ளீஸ்' 'வுட் யூ ப்ளீஸ்', போன்றும் பிரயோகித்தே பழக்கப்பட்ட அவளுக்குக் கையெழுத்துக் கூடப் போட வராத கைநாட்டுப் பேர்வழிகளே அதிகம் நிறைந்த ம.மு.க.வில் , பழகுவது தர்ம சங்கடமாக

அநு—2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/39&oldid=1256270" இலிருந்து மீள்விக்கப்பட்டது