பக்கம்:அநுக்கிரகா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

43

"ஆக்ஸ்போர்டிலே ஆங்கிலத்தை கற்று அறிவு பல பெற்ற அண்ணியார் சேரத் தேர்ந்தெடுத்த இயக்கம், எம் தலைவன் ஏந்திய இயக்கமே! —என்றும்,

"மரியாதை மிகு அநுக்கிரகா அண்ணியாரின் பொன்னான திருவடிகளை வணங்கி, என் பேச்சைத் தொடங்குகிறேன்," —என்றும் விதவிதமாகப் பேச்சுக்கள் அமைந் திருந்தன. கேட்ட வார்த்தைகளின் கனம் தாங்காமல் அவளுக்குத் தலை கனப்பது போலிருந்தது. அது தலைக்கனமா, தலைவலியா என்று இனம் புரியாததாயும் இருந்தது. ஓர் இளைஞன் சற்று அதிகமாகவே சென்று, " அன்னை அநுக்கிரகா தேவி அவர்கள் முன்பு பேசக் கிடைத்த இந்த வாய்ப்புக்காக உண்மையிலேயே பெருமைப் படுகிறேன், —என்று இன்னும் திருமணம் கூட ஆகாத அவளை, அவளே வெட்கப்பட்டுக் கூசும்படி அன்னைப் பட்டமும் தேவிப் பட்டமும் கொடுத்து விளித்தான்.

கொஞ்சம் எடுப்பான அழகான யார் வந்து நாற்காலியைப் போட்டுக் கொண்டு மேடையில் அமர்ந்தாலும், உடனே அவர்கள் தலைமையை ஏற்று வணங்கி, அடி பணிந்து விட அவர்கள் : தயாராயிருந்தார்கள். அவர் களிடையே தன்னைப் போல, அழகும், வசதியும் உள்ள ஒருத்தி. தலைவியாக உயர்வது மிக மிகச் சுலபம் என்று அநுக்கிரகாவுக்கே புரிந்தது. வைக்கோல் அள்ளிப்போடுவது போலவும், சாணம் வாரிக் கொட்டுவது போலவும் வார்த்தைகளை மேடையில் வாரிப் போட்டார்களே ஒழிய, அங்கு. யாரும் எதற்காகவும் வார்த்தைகளின் அர்த்தம் பற்றியோ கனபரிமாணம் பற்றியோ கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. முதல் தடவையாக இப் போதுதான் மேடையேறியுள்ள அவளை மேதை என்கிறார்கள். உளறிக் கொட்டிய மற்றொரு பேச்சாளனை நாவேந்தர் நாராயணனார். என்றார்கள், கடுகை மலையாக்கினார்கள், மலையைக் கடுகாக்கினார்கள், மிகைப் படுத்தலும், குறை கூறலும், பயங்கரமான அளவு எல்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/45&oldid=1256660" இலிருந்து மீள்விக்கப்பட்டது