பக்கம்:அநுக்கிரகா.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

அநுக்கிரகா

சீவகசிந்தாமணி சிங்கம், புறநானுற்றுப்புலி, அக நானூற்று யானை எல்வாவற்றுக்குமே ஓரொரு கைதட்டல் எழுந்து ஓய்ந்தது.

வைகை எக்ஸ்பிரஸ் ஸ்பீடில் படு வேகமாகப் படித்ததில் இடும்பனார் எழுதிக் கொடுத்திருந்த கத்தை இருபது நிமிஷம் தான் வந்தது. ஆனாலும் கூட்டம் அவனது பேச்சைக் கொண்டாடலே செய்தது. "சதையின் சதையான தமிழ்ப் பெருமக்களுக்கு அன்பு வணக்கமும் ஆழமான நன்றியும் கூறி முடிக்கிறேன். என்று அவள் பேச்சை முடித்தபோது, கடலலைபோல் எழுந்த கரகோஷம் ஓய ஐந்து நிமிடங்களுக்கு மேலே ஆயிற்று.

அவளுக்கே அது ஆச்சரியமாக இருந்தது. தனக்கும் புரியாமல், கேட்கிறவர்களுக்கும் புரியாமல் புலவர் கடும்பனூர் இடும்பனார் வார்த்தைகளைக் கொண்டு செய்திருந்த வாணவேடிக்கை மக்களிடம் இத்தனை அமோகமான வரவேற்பைப் பெற்றதைப் பார்த்து வியந்தாள், ஏதாவது கடமுடவென்று ஓசை வருகிறாற் போல் மேடையிலே சத்தம் போட்டால் கூட இந்த அப்பாவி மக்களுக்கு அதுவே போதுமோ என்றுகூடத் தோன்றியது. இத்தனைக்கும் புலவர் எழுதிக் கொடுத் திருந்ததை அவள் தப்புத்தப்பாகத்தான் உளறிக் குழறி வாசித்திருந்தாள், மேடையிலே விழுந்த ரூபாய் நோட்டு மாலையையும் மாலைக்குப் பதிலாகக் கிடைத்த ரூபாய்களையும் அவளிடம் பத்திரமாகக் கேட்டு வாங்கிக் கொண்ட பொன்னுரங்கம், அவளுக்கு மட்டுமே கேட்கும் தணிந்த குரலில், "அடுத்த கட்டத்துக்கு வேணுமில்லே? நீங்க பாட்டுக்கு எடுத்துக்கிட்டுப் போயிட்டா எப்படி? என்று சிரித்தபடியே கேட்டான்.

எல்லாம் அப்பாவின் பணத்தில் பொன்னுரங்கத்தின் ஏற்பாடுதான் என்பது அவளுக்கு அப்போது புரிந்தது.

"ஒரு பத்திருபது. ஊழியருங்க கூட்டம் முடிஞ்சதும் சாப்பிட வருவாங்க, ஏற்பாடு பண்ணிடுங்க என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/50&oldid=1256673" இலிருந்து மீள்விக்கப்பட்டது