பக்கம்:அநுக்கிரகா.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

49

பொன்னுரங்கம் முத்தையாவிடம் முன்கூட்டியே சொல்லியிருந்தான்.

"நாங்க சைவமாச்சேப்பா?. உன் ஆளுங்க எப்படி? இட்லி, வடை போதுமா?"

"போதாதுங்க. ஸ்பெசலா முனியாண்டி விலாஸ்ல சொல்லி வச்சிடுங்க."

"ஒவ்வொரு கூட்டத்துக்கும் இதெல்லாம் பண்ணணுமா ?"

"கட்டாயம் பண்ணணும்! இல்லாட்டிக் கொடி கட்ட, மேடை போட தோரணம் தொங்கவிட, பட்டாஸ் வெடிக்க ஆள் அம்புட மாட்டான், கூட்டம் முடிஞ்சு பிரியாணி போட்டாத்தான் வருவாங்க."

"சரி! கைத்தறித் துண்டு, மாலை, ரூபாய் நோட்டு, போஸ்டர், மைக் செட் செலவு மாதிரிப் பிரியாணி செலவுன்னு ஒரு தொகை பட்ஜெட்டிலே ஒதுக்கிட வேண்டியது தான்" என்று சிரித்தபடியே அதற்கு இசைந்திருந்தார் முத்தையா.

சும்மா ஒரு பத்து இருபதுபேர் என்று பொன்னுரங்கம் ஒரு வார்த்தைக்குச் சொல்லியிருந்தானேயொழிய, கூட்டம் முடிந்ததும் லாரிகளிலும், டிராக்டர்களிலும் இருநூறு பேருக்கு மேல் ஆவாரம்பட்டு ஹவுஸில் மொய்த்து விட்டார்கள். அத்தனை பேருக்கும் பிரியாணி சாப்பாடு போட்டு அனுப்ப இரவு ஒரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அதில் ரிங்லீடர்கள் மாதிரி இருந்த சில அடியாட்களுக்கு போகிற செலவுக்கு ரொக்கமும் தரவேண்டியிருந்தது. முதல் கூட்டமான் நெல்லுப்பேட்டை மைதானக் கூட்டத்துக்குக் கிட்டத்தட்ட ஐயாயிரம் ரூபாய்க்கு மேலே செல வாகிவிட்டது, முத்தையாவுக்கு.

எல்லோரும் போனபின், முத்தையாவும். பொன்னுரங்கமும் தனியான போது, "என்னப்பா, வீட்டைச் சுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/51&oldid=1256760" இலிருந்து மீள்விக்கப்பட்டது