பக்கம்:அநுக்கிரகா.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

அநுக்கிரகா

ஒரே சேரியும் கக்கூஸுமா ஆக்கிட்டாங்களேங்கிற எரிச்சல்லே அநுவை அரசியலில் இறக்கினா உன் ஆளுங்க வீட்டையே ஸ்லம் ஆக்கிடுவாங்க போலிருக்கே?" என்றார் முத்தையா.

"பொறுத்தார் பூமியாள்வார்னு பழமொழி இருக்குங்க."

"பழமொழி சரி! நடைமுறையிலே பூமியை ஆள்றதுக்கு முன்னாடியே செலவழிச்சுச் செலவழிச்சுத் திவாலாயிடும் போலத் தோணுதே!"

"பின்னே எப்படிக் கனிவண்ணனைக் கீழே இறக்கிட்டு அநு அம்மாவை இந்தத் தொகுதி எம்.எல்.ஏ, ஆக்குறது? இப்போ வேணும்னாப் போய்ப் பாருங்க, கனிவண்ணன் வீட்டிலே ஒரு லாரிலோடு ஜனம் சாப்பிட்டுக் கைகழுவிக் கிட்டிருக்கும். இன்னிக்குப் பாலிடிக்ஸ்லே இதெல்லாம் மாமூலாயிடிச்சுங்க. வேற வழியே இல்லே. சம்பாதிக்கணும்னா முதல்லே விட்டுப் பிடிச்சுத்தான் ஆவணும்."

"சரி, தொலையட்டும். அடுத்த கூட்டம் எங்கே செட்டப் பண்றே? எனக்கு இது ஒரு பிரஸ்டிஜ் இஷ்யூ' வாயிடிச்சு. அந்தப் பயல் கனிவண்ணனைக் கீழே இறக்கி அநுவை அரசியலுக்குக் கொண்டார்றதே நம்ம வீட்டைச் சுத்தி வளைச்சுப் போட்டிருக்கிற குடிசைகளை நீக்கி 'ஆவாரம்பட்டு ஹவுஸை'ப் பழைய அரண்மனை நிலைமைக்கு உயர்த்தறதுக்குத்தான்."

"கண்டிப்பா செஞ்சுடலாங்க. நானாச்சு. அது அம்மாவை எம்.எல்.ஏ. ஆக்கறதோட நான் விட்டுடப் போறதில்லை. வீட்டு வசதி மந்திரியாகவே பண்றேன் பாருங்க. அப்புறம் உங்க பிரச்சினை சுளுவாத் தீர்ந் துடுங்க."

"உங்கக் கட்சியிலே எத்தனையோ சீனியர் ஆளுங்களெல்லாம் இருக்கிறப்போ அநு எப்படி மந்திரி ஆக முடியும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/52&oldid=1256761" இலிருந்து மீள்விக்கப்பட்டது