பக்கம்:அநுக்கிரகா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

அநுக்கிரகா

"ஒரே கட்சி மேடையிலே கூடவா அதைப் பண்ணுவாங்க?"

"சில கட்சிங்களிலே அந்தக் கட்சிக்குள்ளாற இருக்கிற கோஷ்டிங்களே எதிர்க் கட்சிகளைவிடப் பயங்கரமா இருப்பாங்க, ம.மு.க. விலேயும் அப்படித்தான். அநு அம்மா நம்ம கோஷ்டி. கனிவண்ணன் எதிர் கோஷ்டி."

"உங்க தலைவரு இதையெல்லாம் விசாரிச்சு ராசி பண்ணிவைக்க மாட்டாரா?"

“மாட்டாருங்க. எத்தினி கோஷ்டி இருக்குதோ அத்தனை தூரம் நல்லதுன்னு நினைப்பார். 'அப்பத்தான் தங்கிட்டேப் பயப்படுவாங்க, கோஷ்டிங்களே இல்லாமே தங்களுக்குள்ளே அவங்கவங்க ஒத்துமையாக இருந்துட்டா அப்புறம் மேலிடத்தை மதிச்சுப் பயப்பட மாட்டாங்க'ன்னு தலைவருங்களே கோஷ்டிங்களை வளர்த்துப்பாங்க."

"ரொம்ப வேடிக்கையாவில்லே இருக்கு நீ சொல்றது?"

“நிஜங்க."

"நிஜம் தான்! ஆனா ரொம்பக் கசப்பா இருக்கேப்பா?"

"எல்லாப் பார்ட்டீஸ்லேயும் இப்படித்தாங்க! தலைவருங்க வசதிக்காகவே கட்சிக்குள்ளே கோஷ்டிங்க இருக்கு. ஒத்துமைங்கிறதைச் சும்மா ஒரு கோஷத்துக்காக வச்சிருப்பாங்க! கட்சிக்குள்ளே ரொம்ப மோசமான கோஷ்டிப் பூசல் நிலவறப்போ, 'பூசல்களைத் தவிர்த்து ஒற்றுமையைக் கட்டிக் காப்போம்'னு அறிக்கைவிட ஒரு வாக்கியம் வேணுமில்லே. அப்போதான் ஒத்துமை ஞாபகம் வரும்."

"சரி! வியாக்கியானம் இருக்கட்டும், படுகொலைக் குப்பத்தைப் பத்தியில்லே பேச ஆரம்பிச்சோம்? அங்கே ரௌடி கோஷ்டி இருக்கிறதுக்கும் நீ அதிகப்படி ஆயிரம் ரூபாய் கேட்கிறதுக்கும் என்ன சம்பந்தம்? அதைச் சொல்லுப்பா."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/54&oldid=1256765" இலிருந்து மீள்விக்கப்பட்டது