பக்கம்:அநுக்கிரகா.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

அநுக்கிரகா

 வாட்டி அப்படிப் பேசாதே! வாயை டெட்டால் போட்டுக் கழுவு! எனக்கு அப்படிப் பணம் பண்ணியாகணும்னு ஒண்ணும் மொடை இல்லே. ஏதோ ஆண்டவன் போதுமானதைக் கொடுத்திருக்கான். இருக்கிறவரை தாராளமாகச் செலவழிக்கலாம். செலவழிச்சதை வட்டியும் முதலுமாகத் திருப்பி எடுக்கணும் என்றெல்லாம் என் கிட்டே பேசாதே, அப்புறம் எனக்குக் கெட்ட கோபம் வரும்."

"நீங்க சொல்றப்பவெல்லாம் டெட்டாலோ, பினாயிலோ போட்டுக் கழுவணும்னா நாமே ஒரு ஃபாக்டரி வச்சாத்தான் முடியும்."

"ஒரு ஃபாக்டரியும் வைக்க வேணாம். போய்க் காரியத்தைக் கவனி."

பொன்னுரங்கம் பணத்தோடு அவரிடம் விடை பெற்றுக்கொண்டு படுகொலைக்குப்பம் மீட்டிங்குக்காகப் போஸ்டர் அடிக்கப் போனான். அந்தப் போஸ்டரில் 'அறிவுச் செல்வி அநுக்கிரகா' என்று ஓர் அடைமொழியையும் சேர்த்துப் போட்டுவிட்டான். கைநாட்டுப் பேர்வழியான கனிவண்ணனே 'கருத்துச் சிற்பி கனிவண்ணன்" என்று போடும்போது உண்மையிலேயே பெரும் படிப்பாளியான அநுக்கிரகாவுக்கு ஏன் அறிவுச்செல்வி என்று போடக் கூடாது?' என்று தனக்குத்தானே கேட்டுக் கொண்டு தான் இதைச் செய்திருந்தான். கூட்டத்துக்கான ஏற்பாடுகள் பிரமாதமாக நடந்தன. படுகொலைக்குப்பத்தில் அநுக்கிரகாவை ரோஜாமலர்கள் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்க அங்கங்கே ஏற்பாடுகள் ஜரூராகச் செய்யப்பட்டன. சுவர்களில் எழுதப்பட்டன. தோரணங்கள் கட்டப்பட்டன.

            *                     *                   *
 

எதிர் கோஷ்டி கனிவண்ணனின் தரப்பு ஆட்கள் மெல்ல அவன் காதுக்குத் தகவலை எட்டவிட்டார்கள். நெல்லுப்பேட்டை மைதானத்தில் பொன்னுரங்கம் அநுக்கிரகாவுக்காகக் கூட்டம் ஏற்பாடு செய்ததும், அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/56&oldid=1256771" இலிருந்து மீள்விக்கப்பட்டது