பக்கம்:அநுக்கிரகா.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

அநுக்கிரகா

அநுக்கிரகாவுக்கு இந்த அரசியல் அதிர்ச்சியளிக்கும் ஒரு வேடிக்கையாக இருந்தது. 'தண்டமே! முண்டமே! தறு தலையே...' என்று திட்டுவதுதான் அரசியல் என்றான் பொன்னுரங்கம். ஜனநாயகம், சோஷலிஸம், பொருளாதாரம் பற்றி எல்லாம் பேசவே கூடாது என்றார்கள். அது ஜனங்களுக்குப் புரியாது, பிடிக்காது என்றும் சொன்னார்கள். புரியாது என்பது உண்மையா? அல்லது புரியக்கூடாது என்பது உண்மையா? பிடிக்காது என்பது நிஜமா? பிடிக்கக் கூடாது என்பது நிஜமா? அவள் சிந்தித்தாள். தனக்குள் தான். வெளியே சொல்லவுமில்லை. விவாதிக்கவும் இல்லை. தந்தையிடம் மட்டும் ஒரே ஒரு முறை இதைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டு பேசிப் பார்த்தாள்.

"அவங்க எதைப் பேசச் சொல்றாங்களோ அதைப் பேசிட்டுப் போயேன்? நமக்கு வேண்டியது ஓட்டு. எம், எல். ஏ, சீட். அப்புறம் முடிஞ்சா மந்திரிப் பதவி," என்றார் அவர். அவளால் மேற்கொண்டு அவரிடம் பேச முடியவில்லை.

இப்படி இதைக் கேட்ட பின்பு அவரிடமும் விவாதிப்பதை விட்டு விட்டாள். பேட்டைவாரியாகக் கூட்டங்கள் போட்டுப் பேசினாள். லோகல் பிரச்சினைகளைப் பேசி எங்கெங்கே எது எது ஓட்டுப் பிடித்துக் கொடுக்குமோ அதைப் பற்றி மட்டும் அலசிச் சமாளித்தாள். கை தட்டல், மலர் மாலை, ரூபாய் நோட்டு ஆரம், மாலைக்குப் பதிலாக ரெண்டு ரூபாய் எல்லாம் மாமூலாக எல்லாக் கூட்டத்திலும் நடந்தன. தமிழ்ச்செல்வி, தமிழ்ப் பூங்கொடி, தமிழ்ப் பொன்னி என்ற மூன்றே பெயர்களை அறுபது கூட்டங் களில் எண்பது குழந்தைகளுக்குப் பெயர் வைத்தாயிற்று. இதே ரீதியில் போனால் அந்தத் தொகுதியின் அடுத்த தலைமுறை ஓட்டர் லிஸ்ட்டில் மூன்றே மூன்று பெண் பெயர்கள் தான் திரும்பத் திரும்ப மாற்றி மாற்றி அச்சிடப் பட்டிருக்கும். அந்த அளவிற்கு. அவளும் மற்றவர்களும் இதே பெயர்களை மேடைகளில் குழந்தைகளுக்குச் சூட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/62&oldid=1257422" இலிருந்து மீள்விக்கப்பட்டது