பக்கம்:அநுக்கிரகா.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

61

னார்கள். சில சமயங்களில் பொன்னுரங்கத்தின் ஏற்பாட்டால் பெயர் வைக்கப்பட்ட குழந்தைகளே திரும்பத் திரும்ப மேடையில் நீட்டப்படுகின்றனவோ என்ற சந்தேகமும் உள்ளூற அவளுக்கு இருந்தது.


9

எலெக்‌ஷனுக்கு இன்னும் இரண்டே இரண்டு மாதங்கள் தான் இருக்கின்றன என்கிற சமயத்தில் திடீரென்று பொன்னுரங்கம் பதற்றமாகவும் பரபரப்போடும் ஆவாரம் பட்டு ஹவுஸைத் தேடி வந்தான். முத்தையாவையும் அநுக்கிரகாவையும் சந்தித்தான்.

"பேட்டை பேட்டையாக நம்ப ஆளுங்களை எதிர்த் தரப்பு ஆளுங்க பூந்து அடிக்கிறாங்க. இந்த வன்முறையை நிறுத்தக் கோரி வர்ற ஞாயிற்றுக்கிழமை நெல்லுப் பேட்டை மைதானத்திலே உண்ணாவிரதம் இருக்கணும்."

“சரி, செஞ்சிடலாம்...அதுக்கு என்ன ஏற்பாடு?"

"நம்ம பாப்பாதான் உண்ணாவிரதத்துக்குத் தலைமை ஏற்குது!"

“சரி, ஏற்கலாம். எத்தினி நாள் உண்ணாவிரதம்?"

"நீங்க ஒண்ணு; காலையிலே 8 மணியிலேர்ந்து மாலை 6 மணி வரை, வெறும் பத்து மணி நேர உண்ணாவிரதத்துக்கே ஆளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு, நீங்க என்னடான்னா எத்தினி நாள்னு வேற கேட்டு வயித்தெரிச்சலைக் கௌப்பறீங்க...?"

"இன்னிக்கு இந்தத் தேசத்திலே காலைல எட்டு மணிக்கு அரை வயிற்றுக் கஞ்சி குடிக்கிற எத்தினியோ பேரு மறுபடி ராத்திரி எட்டு மணிக்குத் தான் கால் வயிற்றுக்குச் சாப்பிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/63&oldid=1257423" இலிருந்து மீள்விக்கப்பட்டது