பக்கம்:அநுக்கிரகா.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

63

"குழப்பமாவது ஒண்ணாவது! அதெல்லாம் எதுவுமே இல்லீங்க, எதிரிங்க கலாட்டா பண்ண வந்தால் நாமும் பதிலுக்குத் தயாராயிருக்கணும்னு தான்."

"இப்படிச் செய்யறதுக்குப் பதிலா நீ உண்ணாவிரதத்துக்குள்ளே உட்கார வைக்கப் போற இதே நூறு இருநூறு ஆளுங்களுக்குத் தண்ணி ஊத்திப் பிரியாணி வாங்கிக் கொடுத்து நேரே போய் நம்ம எதிரிங்களை உதைங்கடான்னு சொல்லி ஏவி விட்டுடலாமே?"

"கூடாதுங்க. அப்படிச் செஞ்சா நாம எதிர்பார்க்கிற பப்ளிஸிடி கிடைக்காதுங்க. கலாட்டா பண்ணப் போறோம்னு போஸ்டர் போட்டுக்கிட முடியாது. வன்முறையை எதிர்த்து அநுக்கிரகா தலைமையில் உண்ணாவிரதம்னு போஸ்டர் போடலாம். அதாலே தான் இப்படித் தோது பண்ணியிருக்கேன்."

"சரி, செய்! உனக்குப் பணத்தை வாரி இறைச்சிக்கிட்டு இப்படி ஏதாவது பண்ணிக்கிட்டெ இருக்கணும். இல்லாட்டித் தூக்கம் வராது."

"கொஞ்சம் நமக்குள்ள ரகசியமா இருக்கிற மாதிரி நீங்க காதும் காதும் வச்ச மாதிரி இதுக்கு நம்ம பங்களாவிலேயே ஒரு உதவி செய்யணும்."

"என்ன செய்யணும்?"

"உண்ணாவிரதத்துக்கு உணவு சப்ளை பண்ணணும்."

"என்னது? உண்ணாவிரதத்துக்கு உணவா! வேடிக்கையாய் இருக்கே? விளையாடறியா நீ?"

"நிஜமாத்தாங்க. பட்டினியோட எவனும் உண்ணாவிரதத்துக்கு வரத் தயாராக இல்லீங்க. அதுவும் நான் சொல்ற மாதிரி எதிரிங்க தாக்க வந்தா சமாளிக்கிற பலத்தோட ஆளுங்க கிடைக்கணும்னா, கஷ்டப்பட வேண்டி யிருக்கு. காலைலே அஞ்சு மணிக்கே இருட்டோட இருட்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/65&oldid=1257425" இலிருந்து மீள்விக்கப்பட்டது