பக்கம்:அநுக்கிரகா.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

அநுக்கிரகா

ரெண்டு அவிச்ச முட்டை, ஆறு இட்லி, காப்பி போட்டப் புறம்தான் சாப்பிட்டுட்டுத் தெம்பா உண்ணாவிரத மேடையிலே வந்து உட்காருவாங்க. அம்பது ரூபாவும் ராத்திரி சிக்கன் பிரியாணியோட விருந்தும் போடணும்."

“இதுக்குப் பேர்தான் உண்ணாவிரதமா? பரிதாபம்!"

"பின்னென்ன? காந்தியும், விநோபாவுமா பாழ் போறாங்க. கூலிக்குப் பிடிச்சிக்கிட்டு வரவனை எல்லாம் காந்தி மாதிரி பட்டினி கிடக்கச் சொல்ல முடியுங்களா?"

"ஒண்ணு மீதம் விடாமல் எல்லாப் பெரிய விஷயங்களையுமே அசிங்கப்படுத்திடுவீங்க போலிருக்கேப்பா?"

“என்னா செய்யறதுங்க? கால தேச வர்த்தமானம் அப்படி ஆயிடிச்சுங்களே?"

"சரி, பணம் என்ன வேணும்னு சொல்லுப்பா."

"ஒரு மூவாயிரம் இருந்தா சமாளிச்சிடலாம், சாப்பாட்டு வகையறாசெலவு . உங்க பக்கம். நீங்க பார்த்துக்கிடணும்."

முத்தையாவுக்கு எரிச்சலாய் இருந்தது. பல்லைக் படித்துக்கொண்டு பொறுமையாக பணத்தை எடுத்துக் கொடுத்தார்.

'இன்னும் ஏழே ஏழு வாரம். ஒண்ணே முக்கால் மாசம்தான். எலெக்ஷன் முடிஞ்சு அநு எம்.எல்.ஏ. ஆன மறுநாளே இந்தப் பொன்னுரங்கம் மாதிரி ஆளுங்களை வீட்டிலே படி ஏறக்கூட விடக்கூடாது. இவங்ககிட்டே மட்டும் மாட்டினோமோ பிளாக்மெயில் பண்ணியே பணம் பறிச்சிடுவாங்க. இனிமே இவங்க சங்காத்தமே ஆகாது' என்று அப்போது வைராக்கியமாக நினைத்துக் கொண்டார்.

தன் மகள் எம்.எல்.ஏ. ஆனாலும், மந்திரியானாலும் ஆவாரம்பட்டு ஹவுஸைச் சுற்றியுள்ள குடிசைகளும், சாக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/66&oldid=1257426" இலிருந்து மீள்விக்கப்பட்டது