பக்கம்:அநுக்கிரகா.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

65


கடைகளும், குப்பை மேடுகளும் அகன்று பூக்களும், மரங்களுமாக ஒரு பசுஞ்சோலை உருவாகிச் சுத்தமான காற்றும் கண்ணுக்கு இரம்மியமான சூழலும் கிடைக்கப் போவதை எண்ணினார் அவர்.

ஒரு வகையில் பார்த்தால் இதெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனமான ஆசைகளாகவும், கனவுகளாகவும் அவருக்கே தோன்றின.

இப்படி மகளை அரசியலில் இறக்கி விட்டுவிட்டு அவள், எம்.எல்.ஏ. ஆவாள், மந்திரி ஆவாள் என்ற நைப்பாசையில் போஸ்டருக்கும், பிரியாணிக்கும் - இலட்ச இலட்சமாய்ப் பணத்தை வாரி இறைத்துக்கொண்டு சீரழிவதைவிட அன்றைக்கே அந்தக் கனிவண்ணன் எம்.எல்.ஏ. கிட்டே லஞ்சமாகக் கேட்ட பத்தாயிரம் ரூபாயை மூச்சு விடாமல் ஒரு கவருக்குள் போட்டு அவுனிடம் நீட்டியிருந்தால் ஆவாரம்பட்டு ஹவுஸைச் சுற்றி இப்போது 'ஒரு பூங்கா சிரித்துக் கொண்டிருக்கும். பத்தாயிரம் ரூபாய் பிரச்சினையாய் இருக்கவில்லை. அவன் தன்னைக் காக்கப் போட்டதும், நிறுத்தி வைத்துப் பேசியதும், அவமானப்படுத்தியதும் தான். அவருள் அவனைப் பழிவாங்கும் எண்ணத்தை வளர்த்து முறுக்கேற்றியிருந்தன. இன்னும் அந்த முறுக்குத் தளராமல் தான் உள்ளுக்குள்ளே இருந்தது. பரம்பரை வீராப்பும், தடங்கலற்ற பணவசதியும், நினைத்தது எதுவானாலும் அதை எப்படியும் செய்து முடிக்க வேண்டும் என்ற அவரது நாட்பட்ட முரண்டும் முத்தையாவை அநுவின் அரசியல் பிரவேசத்துக்காக நிறையச் செலவழிக்கச் செய்திருந்தன்.

முதலில் அநுக்கிரகாகூட ஒரு - மாதிரி தயக்கம் காட்டினாள். அரைவேக்காட்டு ஆட்களையும், ஞான சூனியங்களையும் ‘வணக்கம் தலைவரே!’ என்று விளிக்க வேண்டிய அவமானம் தாங்கிக் கொள்ள முடியாமல் இருந்தது. ம.மு.க.வில் அவளுக்கு இருந்த அறிவுக் கூர்மைக்கும் ஐ.க்யூ லெவலுக்கும் குறைவான ஆட்களே நிரம்பி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/67&oldid=1423026" இலிருந்து மீள்விக்கப்பட்டது