பக்கம்:அநுக்கிரகா.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



அநுக்கிரகா

1

சைக்கிள் கடை பொன்னுரங்கம் உறுப்பினர் அட்டையைக் கொண்டுவந்து கொடுத்தபோது அநுக்ரகா தோட்டத்தில் டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தாள்..

பச்சைப் பாய் விரித்தாற்போல ஒரு சீராகக் கத்திரித்து விடப்பட்டிருந்த தோட்டத்துப் புல்வெளியில் பிரம்பு நாற்காலியில் அமர்ந்து 'இந்து' வில் மூழ்கியிருந்த முத்தையாதான் முதலில் அவனிடமிருந்து அதை வாங்கிக் கொண்டார். அவருக்குள் மகிழ்ச்சி பிடிபடாது துள்ளியது.

பொன்னுரங்கம் அவருக்கெதிரே உட்காரவில்லை. நின்றுகொண்டே பேசினான்: "அந்தச் செயலாளர் 'மாம்பழக் கண்ணனோடதான் கொஞ்சம் பேஜாராப் போச்சு சார்! 'இது ஏம்பா? இத்தினி பெரிய ஃபேமிலியிலேர்ந்து நம்ப கட்சியிலே வந்து மெம்பராவுறாங்க? ஆச்சரியமாயிருக்குதே?'ன்னு பிடிச்சுக்கிட்டான். மெம்பர்ஷிப் அப்ளிகேஷனோடு இரண்டு பச்சை நோட்டைச் செருகி நீட்டினேன். அப்பாலே ஏன் கண்டுக்கிறான்? கப்சிப்னு ஆயிட்டான்."

"அப்போ அநு மெம்பராகச் சேர்ந்ததைப் பத்தி அவங்களுக்கு ஒரு சந்தேகம் இருக்குதுன்னு சொல்லு."

"கண்டிப்பா இருக்குங்க. சந்தேகம் மட்டுமில்லே என்னமோ ஏதோன்னு பயப்படவும் செய்யறாங்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/7&oldid=1267798" இலிருந்து மீள்விக்கப்பட்டது